தர்ம பிரபு படம் எப்படி உள்ளது

தமிழில் எமனுக்கு எமன், அதிசயப்பிறவி, லக்கி மேன்,இந்திரலோகத்தில் அழகப்பன், வரிசையில் தமிழில் வந்திருக்கும் எம தர்ம ராஜ்ஜிய சித்திரம்தான் இது. எமதர்மனாக யோகிபாபு நடித்துள்ளார். தனக்கு வயதாகி விட்டது என்பதற்காக தனது மகனை எமதர்மனாக நியமிக்கும் ராதாரவி. ராதாரவியின் மனைவியாக யோகிபாபுவின் அம்மாவாக ரேகா. அழிக்கும் தொழிலை செய்யும் எமதர்மன் ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற அதனால் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அவரது தந்தை ராதாரவிக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஏழு நாட்களுக்குள் யோகிபாபு செய்த தவறை சரி
 

தமிழில் எமனுக்கு எமன், அதிசயப்பிறவி, லக்கி மேன்,இந்திரலோகத்தில் அழகப்பன், வரிசையில் தமிழில் வந்திருக்கும் எம தர்ம ராஜ்ஜிய சித்திரம்தான் இது.

தர்ம பிரபு படம் எப்படி உள்ளது

எமதர்மனாக யோகிபாபு நடித்துள்ளார். தனக்கு வயதாகி விட்டது என்பதற்காக தனது மகனை எமதர்மனாக நியமிக்கும் ராதாரவி. ராதாரவியின் மனைவியாக யோகிபாபுவின் அம்மாவாக ரேகா.

அழிக்கும் தொழிலை செய்யும் எமதர்மன் ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற அதனால் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அவரது தந்தை ராதாரவிக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

ஏழு நாட்களுக்குள் யோகிபாபு செய்த தவறை சரி செய்யலேன்னா புது உலகத்தை படைத்து விடுவேன் என சிவபெருமான், நான் கடவுள் ராஜேந்திரன் மிரட்ட அதன்படி தவறுகளை சரி செய்து ராதாரவிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை சரி செய்ய யோகிபாபு எடுக்கும் முடிவுகளே கதை.

படத்தில் சமகால அரசியல் அந்தக்கால அரசியல் அதிக அளவு பேசப்பட்டுள்ளது ஆனால் மனதோடு ஒட்டவில்லை. நகைச்சுவை காட்சிகள் படத்துக்கு சுதி சேர்க்கவில்லை.

இரண்டாவது பாதி கொஞ்சம் பரவாயில்லை. பார்வையாளர்களின் கருத்துக்களும் அதுவாகத்தான் இருக்கிறது.

சொல்ல வந்த காட்சிகளை நகைச்சுவை காட்சிகளை கொண்டு சிறப்பாக விளக்கி இருக்கலாம் நிறைய சொதப்பல்கள் குறிப்பாக சங்க கால தமிழும் தற்போதைய நடைமுறைத்தமிழும் கலந்து வருவது எல்லாம் குழப்பமாக உள்ளது.

ஒருமுறை பார்க்கும் ரகம்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு, ஜஸ்டின் பிரபாகரன் இசை இரண்டும் பலம்

From around the web