ஹீரோவாக நடிக்க அண்ணாச்சி தயார்

சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் அதிபர் அருள் அண்ணாச்சி, அதிகமாக விளம்பரங்களில் அவரே தோன்றும்போது மக்களுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இவர் திரைப்படம் ஏதாவது ஒன்றில் கதாநாயகனாக நடிப்பாரோ என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில் இவர் படத்தில் கதாநாயகனாக நடிப்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகி விட்டது. ஜேடி,ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கும் படத்தில் நடிக்கிறார்களாம். ஒரு காலத்தில் உல்லாசம் உட்பட சில படங்களை இயக்கியவர்கள் இந்த ஜேடி ஜெரி. பலவருடங்களாக படம் இயக்காத இவர்கள், டிவிக்களில் வரும்
 

சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் அதிபர் அருள் அண்ணாச்சி, அதிகமாக விளம்பரங்களில் அவரே தோன்றும்போது மக்களுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இவர் திரைப்படம் ஏதாவது ஒன்றில் கதாநாயகனாக நடிப்பாரோ என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில் இவர் படத்தில் கதாநாயகனாக நடிப்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகி விட்டது.

ஹீரோவாக நடிக்க அண்ணாச்சி தயார்

ஜேடி,ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கும் படத்தில் நடிக்கிறார்களாம். ஒரு காலத்தில் உல்லாசம் உட்பட சில படங்களை இயக்கியவர்கள் இந்த ஜேடி ஜெரி. பலவருடங்களாக படம் இயக்காத இவர்கள், டிவிக்களில் வரும் பல அட்ராக்சனான விளம்பரங்களை இயக்கும் விளம்பர இயக்குனர்கள் இவர். இதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் இவர்கள் அருள் அண்ணாச்சியை வைத்து விளம்பரப்படத்தையும் இவர்கள்தான் இயக்கி வருகிறார்கள். இவர்கள்தான் அண்ணாச்சியை வைத்து படம் இயக்க இருப்பதாகவும் மும்பை ஹீரோயின் ஒருவரிடம் பேச்சு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

From around the web