லாஸ்லியாவால் கவினை ப்ரேக் அப் செய்த சாக்ஷி…!!!

நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் 2 அணிகளாக பிரிக்கப்பட்டு மூன்று விவாத தலைப்புகள் வழங்கப்பட்டன. அந்த த் தலைப்புகள் அடிப்படையில் விவாதம் நடைபெறும் என்றும் இது பிக் பாஸ் நீயா? நானா? என்றும் கூறப்பட்டது. விவாதத்தின்போது பிக்பாஸ் வீட்டில் இருப்பது நட்பா அல்லது அதையும் தாண்டி புனிதமானதா..? என்ற தலைப்பினால் சாக்சி, கவின், லாஸ்லியாவிற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. நீயா? நானா? டாஸ்க் முடிவடைந்ததும், இந்தப் பிரச்சினை பெரிதானது. லோஸ்லியா உடன் நடந்த உரையாடலின் போது, சாக்ஷியை
 

நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் 2 அணிகளாக பிரிக்கப்பட்டு மூன்று விவாத தலைப்புகள் வழங்கப்பட்டன. அந்த த் தலைப்புகள் அடிப்படையில் விவாதம் நடைபெறும் என்றும் இது பிக் பாஸ் நீயா? நானா? என்றும் கூறப்பட்டது.

விவாதத்தின்போது பிக்பாஸ் வீட்டில் இருப்பது நட்பா அல்லது அதையும் தாண்டி புனிதமானதா..? என்ற தலைப்பினால் சாக்சி, கவின், லாஸ்லியாவிற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. நீயா? நானா? டாஸ்க் முடிவடைந்ததும், இந்தப் பிரச்சினை பெரிதானது.

லாஸ்லியாவால் கவினை ப்ரேக் அப் செய்த சாக்ஷி…!!!

லோஸ்லியா உடன் நடந்த உரையாடலின் போது, சாக்‌ஷியை தான் காதலிக்கவில்லை, ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு அந்த நட்பு தொடரும் என கவின் தெரிவித்தார். தொடர்ந்து, சாக்‌ஷியிடம் பேசுமாறு கவினுக்கு அறிவுறுத்தினார் லோஸ்லியா. பிறகு, சாக்‌ஷியிடம் கவின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 

அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. முடிவில் கவினுடான நட்பை முறித்துக்கொண்டார் சாக்‌ஷி. பிக்பாஸ் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்றாலும் சரி நாம் இருவரும் பேசிக்கொள்ள வேண்டாம், பார்த்துக் கொள்ள வேண்டாம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் சாக்‌ஷி. 


From around the web