கவினை காப்பாற்ற விஜய் டிவி செய்யும் வேலையைப் பாருங்க..!

கவினுக்கு வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், இணையத்தில் திட்டமிட்டே சில சதி வேலைகள் நடப்பதாக பிக்பாஸ் தமிழ் ரசிகர்களும், கவினின் எதிர்பாளர்களும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவி தொகுப்பாளர்களில் ஒருவர் தான் கவின். ஆரம்பத்தில் கார்ப்பரேட் கலை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள் என மெதுவாக திரைப் பயணத்தை தொடங்கினார். அப்போது கவினுக்கு கிடைத்த வாய்ப்புதான் சரவணன் மீனாட்சி சீசன் 3. அந்த தொலைக்காட்சி தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் பல
 

கவினுக்கு வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், இணையத்தில் திட்டமிட்டே சில சதி வேலைகள் நடப்பதாக பிக்பாஸ் தமிழ் ரசிகர்களும், கவினின் எதிர்பாளர்களும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

விஜய் டிவி தொகுப்பாளர்களில் ஒருவர் தான் கவின். ஆரம்பத்தில் கார்ப்பரேட் கலை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள் என மெதுவாக திரைப் பயணத்தை தொடங்கினார். 

அப்போது கவினுக்கு கிடைத்த வாய்ப்புதான் சரவணன் மீனாட்சி சீசன் 3. அந்த தொலைக்காட்சி தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் பல தமிழகத்தில் பிரபலமானார். 

கவினை காப்பாற்ற விஜய் டிவி செய்யும் வேலையைப் பாருங்க..!சாக்‌ஷி உடன் நெருக்கம், அதே சமயத்தில் லோஸ்லியா உடன் காதல் என பிக்பாஸ் வீட்டில் இவரைச் சுற்றி பல சர்ச்சைகள் உலா வருகின்றன. இதனால் எழுந்த பிரச்னைகள் காரணமாக, மற்ற போட்டியாளர்களால் அவர் இந்த வாரம் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

கவினை காப்பாற்றுவதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அவருடைய குடும்பத்தினரின் புகைப்படங்கள் இணையதளங்களில் உலா வருகின்றன. தனது தாய், தந்தை மற்றும் சகோதிரியுடன் கவின் இருக்கும் படங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. 

இதுதொடர்பாக கருத்து பதிவிட்டு வரும் பிக்பாஸ் ரசிகர்களில் ஒரு பிரிவினர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவினை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் திட்டமிட்டே அவரது குடும்பத்தினரின் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. 

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம், கவினின் நற்பெயருக்கு ஏற்பட்ட கலங்கத்தை போக்கும் வகையிலும், அவருடைய குடும்ப உறுப்பினர் படங்கள் சமூகவலைதளங்களில் உலா வருகின்றன என்றும் தகவல்கள் தெரியவந்துள்ளன. 

From around the web