மதுமிதாவை வெளியேற்றுங்கள்… பார்வையாளர்கள் கருத்து !!!

பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது வாரத்தை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த வார லக்ஸுரி பட்ஜெட்டுக்கான டாஸ்க்குகளை ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டை கீரிப்பட்டி, பாம்புப்பட்டி என இரண்டு கிராமங்களாக பிரித்து. போட்டியாளர்களை இரண்டு ஊர்க்காரர்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். கழிவறைக்குச் செல்லவும், பாத்திரம் கழுவும் பாம்புப்பட்டி ஆட்கள் ஒப்புதல் அளித்தால் மட்டும் கீரிப்பட்டி மக்களால் அந்த வேலைகளை செய்ய முடியும். அதேபோல சாப்பிடவும், வீட்டுக்குள் வருவதற்கும் கீரிப்பட்டி ஆட்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பாம்புப்பட்டி ஆட்கள்
 

பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது வாரத்தை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த வார லக்ஸுரி பட்ஜெட்டுக்கான டாஸ்க்குகளை ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டை கீரிப்பட்டி, பாம்புப்பட்டி என இரண்டு கிராமங்களாக பிரித்து. போட்டியாளர்களை இரண்டு ஊர்க்காரர்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். கழிவறைக்குச் செல்லவும், பாத்திரம் கழுவும் பாம்புப்பட்டி ஆட்கள் ஒப்புதல் அளித்தால் மட்டும் கீரிப்பட்டி மக்களால் அந்த வேலைகளை செய்ய முடியும். 

மதுமிதாவை வெளியேற்றுங்கள்… பார்வையாளர்கள் கருத்து !!!


அதேபோல சாப்பிடவும், வீட்டுக்குள் வருவதற்கும் கீரிப்பட்டி ஆட்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பாம்புப்பட்டி ஆட்கள் உணவு சாப்பிடவும், வீட்டுக்குள் செல்லவும் முடியும். மனமிருந்தால் ஒரு ஊர் காரர், மற்ற ஊராருக்கு டாஸ்க்குகளை வழங்கி, அவர்களுக்கு தேவையான வேலையைச் செய்ய அனுமதி அளிக்கலாம். 

இந்த டாஸ்க்கின் பெயரால் போட்டியாளர்கள் மீது இருக்கும் வஞ்சத்தை சிலர் தீர்த்துக் கொள்ள முயற்சிப்பதை ஊகிக்க முடிகிறது. நேற்று, இதுபோல சில நடவடிக்கைகள் நடந்த போது மீரா மிதூனுக்கும், சேரனுக்கும் முட்டிக்கொண்டது. பிறகு இருவரும் சமாதானம் அடைந்தனர். 

இந்நிலையில், இன்று கழிவறைக்குச் செல்ல அனுமதி கேட்கும் மதுமிதாவுக்கு ஒரு டாஸ்க் வழங்குகிறார் சாண்டி. டாஸ்கில் ஈடுபடும் மதுமிதாவை விளையாட்டாக சாண்டி சீண்டும் போது, மதுமிதா பொறுமை இழந்து பொங்கிவிடுகிறார். இதனால் பிக்பாஸ் வீடே பரபரப்பு அடைகிறது. 

பிறகு வழக்கம் போல மற்ற போட்டியாளர்கள் வந்து அவர்கள் இருவரையும் சமாதானம் செய்கின்றனர். மதுமிதா முன்கோபக்காரர். அவரால் சிலர் செய்யும் விளையாட்டுத்தனமான விஷயங்களை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதனால் விரைவில் அவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

From around the web