மதுமிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கணவர்!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். ஏற்கனவே கமல் ஹாசன் கூறியபடி 17 ஆவது போட்டியாளர்கள் வருவார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், 5 வாரம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக 6ஆவது வாரத்தில் அடியெடுத்து
 

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.

ஏற்கனவே கமல் ஹாசன் கூறியபடி 17 ஆவது போட்டியாளர்கள் வருவார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இந்த நிலையில், 5 வாரம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக 6ஆவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து, இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது.

மதுமிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கணவர்!

இதில், பிக் பாஸ் டுவிஸ்ட் கொடுக்கும் வகையில், ஓபனாக நாமினேஷன் வைத்துள்ளார். இதன் மூலம் போட்டியாளர்களுக்கு இடையில் வீண் மனஸ்தாபம் ஏற்பட்டது தான் மிஞ்சியது. 

சரி, இந்த நாமினேஷனில் கவின், மதுமிதா, ரேஷ்மா, சாக்‌ஷி, அபிராமி ஆகிய 5 போட்டியாளர்கள் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கு நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். ஓபனாக நடந்த நாமினேஷன் மூலம் சாக்‌ஷி, அபிராமி, ரேஷ்மா ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

ஆம், சாக்‌ஷி தனது சொந்த விஷயத்திற்காக கவினை நாமினேட் செய்துள்ளார். ரேஷ்மா தன்னை குற்றம் சாட்டிய சேரனையும், பெண்களை தவறாக எண்ணும் கவினையும் நாமினேட் செய்தார். அபிராமி தொடர்ந்து தான் நாமினேட் செய்யப்படுவதாக வருத்தப்பட்டுள்ளார். 

போட்டியாளர்கள் பலரும் சோகத்தில் இருந்த நிலையில், மதுமிதாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், பிக் பாஸ் வீட்டில், ஸ்டோர் ரூமில், கேக் மற்றும் வாழ்த்து அட்டை கொடுத்த பிறகு மதுமிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web