பதறி அடித்துக் கொண்டு ஓடிய சரவணன்!!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சண்டை, சச்சரவு, புறணி பேசுதல், காதல் ப்ரேக் அப், பிறந்த நாள் கொண்டாட்டம் என பல்வேறு முகத்தினைக் கொண்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய 37ஆவது எபிசோடில் போட்டியாளர்களுக்கு போடு ஆட்டம் போடு டாஸ்க் கொடுக்கப்பட்டது. காலையில் முகென் மற்ற போட்டியாளர்களுக்கு ரேப் சாங் கற்றுக்கொடுத்தார் இதையடுத்து, இந்த வாரத்திற்காக லக்ஷூரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், போடு ஆட்டம் போடு என்பது தான்
 

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சண்டை, சச்சரவு, புறணி பேசுதல், காதல் ப்ரேக் அப், பிறந்த நாள் கொண்டாட்டம் என பல்வேறு முகத்தினைக் கொண்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

நேற்றைய 37ஆவது எபிசோடில் போட்டியாளர்களுக்கு போடு ஆட்டம் போடு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

காலையில் முகென் மற்ற போட்டியாளர்களுக்கு ரேப் சாங் கற்றுக்கொடுத்தார் இதையடுத்து, இந்த வாரத்திற்காக லக்‌ஷூரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், போடு ஆட்டம் போடு என்பது தான் டாஸ்க்.

அதாவது, போட்டியாளர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உடைகளை அணிந்து கொண்டு, அவர்களது பாடலுக்கு நடனம் ஆட வேண்டும். இதில், பாடல் வரும் நேரத்தில் யாரேனும் வரவில்லை என்றால், பட்ஜெட்டில் இருந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பதறி அடித்துக் கொண்டு ஓடிய சரவணன்!!

இதில் ஒவ்வொருவருக்கு ஒரு பாடல் கொடுக்கப்பட்டது. முதலில் குரூப் டான்ஸ்க்கான பாடல் கொடுக்கப்பட்டது. ஆனால், அபிராமி லேட்டாக வந்ததால் வார்னிங் கொடுக்கப்பட்டு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது. இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் சலசலப்பு ஏற்பட்டது.

அதனால் அனைவரும் கவனமாகவெ இருந்தனர், அப்போது பாத்ரூம் சென்ற சரவணனின் விஜயகாந்த் கெட்டப்புக்கான கடைவீதி கலகலக்கும் என்ற பாடல் போடப்பட்டது.

அப்போது அவர் அங்கிருந்து பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார், பின்னர் இந்தப் பாடலுக்கு விஜயகாந்த் போல சிறப்பாக ஆடி முடித்தார் சரவணன். 


From around the web