சிம்பு குணத்துக்கேற்ற பெண்ணை அத்திவரதர் கொடுப்பார்- டி.ஆர்

தமிழ்நாட்டில் கோவில்கள் நிறைந்த மாயவரம் பகுதியை சேர்ந்தவர் டி. ராஜேந்தர் அப்படிப்பட்டவர் கோவில்களுக்கு செல்லாமல் இருப்பாரா? அனைத்து முக்கிய கோவில் வைபவங்களுக்கும் அவர் சென்று விடுவார். அத்திவரதர் தரிசனத்துக்கும் அவர் நேற்று வந்தார். அத்திவரதரை தரிசித்த பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். என்னுடைய மகன் சிலம்பரசன் வெளிநாட்டில் இருக்கிறார் இருந்தாலும், ‘காஞ்சிபுரம் போய் அத்திவரதரைத் தரிசனம் பண்ணீங்களா அப்பா?’ என்று கேட்டார். என் மகனுக்குத் திருமணம் நடக்கணும்னா பெருமாள்கிட்டதான் கேட்க முடியும். குறையை யாரிடம் சொல்ல முடியும்?
 

தமிழ்நாட்டில் கோவில்கள் நிறைந்த மாயவரம் பகுதியை சேர்ந்தவர் டி. ராஜேந்தர் அப்படிப்பட்டவர் கோவில்களுக்கு செல்லாமல் இருப்பாரா? அனைத்து முக்கிய கோவில் வைபவங்களுக்கும் அவர் சென்று விடுவார்.

சிம்பு குணத்துக்கேற்ற பெண்ணை அத்திவரதர் கொடுப்பார்- டி.ஆர்

அத்திவரதர் தரிசனத்துக்கும் அவர் நேற்று வந்தார். அத்திவரதரை தரிசித்த பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

என்னுடைய மகன் சிலம்பரசன் வெளிநாட்டில் இருக்கிறார் இருந்தாலும், ‘காஞ்சிபுரம் போய் அத்திவரதரைத் தரிசனம் பண்ணீங்களா அப்பா?’ என்று கேட்டார். என் மகனுக்குத் திருமணம் நடக்கணும்னா பெருமாள்கிட்டதான் கேட்க முடியும். குறையை யாரிடம் சொல்ல முடியும்? பெருமாளிடம்தான் சொல்ல முடியும். நானும் சொன்னேன்.

சாதாரண ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், எப்படி வேண்டுமானாலும் நான் தேர்ந்தெடுத்து விடலாம். ஆனால், அப்படி நான் தேர்ந்தெடுக்க முடியாதல்லவா. என் மகனுக்குப் பிடித்த, அவன் மனதுக்கு ஏற்ற, அவனுடைய குணத்துக்கு ஏற்ற ஒரு மணமகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னால், அது அத்திவரதரால் மட்டுமே முடியும்.”

இவ்வாறு டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

From around the web