பசுவை கடத்தி பாலியல் சித்ரவதை செய்த ஒடிசா இளைஞர்கள் கைது

பாலியல் வன்புணர்வை பெண்கள் மட்டுமில்லாமல், சிறு குழந்தைகள் உட்பட பலரிடம் செய்து வரும் கொடூரர்கள் இருந்து வருகின்றனர். உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது என்பதற்கேற்ப தற்போதைய காலக்கட்டங்களில் இது போல குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இப்போது சிறு குழந்தைகளையும் மட்டுமல்லாது வாயில்லா ஜீவன்களான கால்நடைகளையும் சிலர் விட்டு வைப்பதில்லை. திருப்பூர் அருகேஒடிசாவை சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேர் பசுமாட்டை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மூவரையும் ப்பிடித்து, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை
 

பாலியல் வன்புணர்வை பெண்கள் மட்டுமில்லாமல், சிறு குழந்தைகள் உட்பட பலரிடம் செய்து வரும் கொடூரர்கள் இருந்து வருகின்றனர். உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது என்பதற்கேற்ப தற்போதைய காலக்கட்டங்களில் இது போல குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

பசுவை கடத்தி பாலியல் சித்ரவதை செய்த ஒடிசா இளைஞர்கள் கைது

இப்போது சிறு குழந்தைகளையும் மட்டுமல்லாது வாயில்லா ஜீவன்களான கால்நடைகளையும் சிலர் விட்டு வைப்பதில்லை.

திருப்பூர் அருகேஒடிசாவை சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேர் பசுமாட்டை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மூவரையும் ப்பிடித்து, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பல்லடத்தை அடுத்த பெருமாக்கவுண்டன்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது பசுவுக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு அடைந்து வந்ததால் நேற்றிரவு வீட்டுக்கு வெளியே கட்டி வைத்து கண்காணித்து பார்த்து வந்தார்.

நள்ளிரவில் பசுவின் சப்தம்கேட்டு விழித்த கந்தசாமி, வெளியே வந்து பார்த்தபோது பசுவை காணவில்லை. அந்தப்பகுதியில் தேடியபோது 3 இளைஞர்கள் பசுவை கடத்திச் கொண்டு சென்று கோழிப்பண்ணையில் கட்டி வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார் கந்தசாமி

உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மூவரையும் பிடித்து வந்து கட்டி வைத்து வந்தனர் ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து இவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர் தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் மூவரையும் மீட்டு விசாரித்ததில், அவர்கள் ஒடிசாவை சேர்ந்தவர்கள் என்பதும், அருகில் உள்ள கல்குவாரியில் பணி செய்து வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து இது போன்று பசுவிடம் பாலியல் சித்ரவதையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததையடுத்து இவர்கள் மூவரையும் கைது செய்தனர்.

From around the web