கட்டை பைகளுக்கு விதித்த தடையை நீக்க மறுத்த மதுரை கோர்ட்

எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் இருந்து வந்தது. வணிக நிறுவனங்கள் பலவற்றில் அதாவது சாலையோர கடைகளில் இருந்து, பெரிய ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் வரை இந்த பிளாஸ்டிக் பைகள் கடந்த வருடம் ஜனவரி வரை பயன்பாட்டில் இருந்து வந்தது.ஜனவரி2019ல் இருந்து கடுமையான தடையை தமிழக அரசு அமல்படுத்தி இருந்தது. இருப்பினும் இந்த பைகள் விற்பனைக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்ட பட்டியலில், கார்பனேட் பைகள் எனப்படும் கட்டைப்பைகள் பயன்பாட்டிற்கு
 

எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் இருந்து வந்தது. வணிக நிறுவனங்கள் பலவற்றில் அதாவது சாலையோர கடைகளில் இருந்து, பெரிய ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் வரை இந்த பிளாஸ்டிக் பைகள் கடந்த வருடம் ஜனவரி வரை பயன்பாட்டில் இருந்து வந்தது.ஜனவரி2019ல் இருந்து கடுமையான தடையை தமிழக அரசு அமல்படுத்தி இருந்தது.

கட்டை பைகளுக்கு விதித்த தடையை நீக்க மறுத்த  மதுரை கோர்ட்

இருப்பினும் இந்த பைகள் விற்பனைக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்ட பட்டியலில், கார்பனேட் பைகள் எனப்படும் கட்டைப்பைகள் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த பைகளையும் தமிழக அரசு தடை செய்துள்ளது. இதில் கார்பனேட் என்ற பொருள் உள்ளதால் இப்பையை தடை செய்துள்ளது.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த ஒருவர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

கட்டைபைகளை அனுமதிக்க முடியாது விதித்த தடை தொடரும் என நீதிபதிகள், டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நலன் கருதியே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், மனுதாரர் கோரிக்கை ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

From around the web