‘டார்லிங்’ நயன்தாராவுக்காக டுவீட் போட்ட அட்லி!

இயக்குனர் அட்லி இயக்கிய முதல் திரைப்படமான ‘ராஜா ராணி’ படத்தின் நாயகியான நயன்தாரா தற்போது அட்லி இயக்கி வரும் ‘பிகில் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ‘பிகில்’ திரைப்படம் வெளியாக இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில் நயன்தாராவை இதுவரை புரமோஷனுக்கு படக்குழுவினர் பயன்படுத்தவே இல்லை. முழுக்க முழுக்க விஜய்யை மட்டுமே புரமோஷனுக்கு படக்குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அட்லி தனது டுவிட்டரில் விஜய் உடன் நயன்தாரா இருக்கும் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு
 
‘டார்லிங்’ நயன்தாராவுக்காக டுவீட் போட்ட அட்லி!

இயக்குனர் அட்லி இயக்கிய முதல் திரைப்படமான ‘ராஜா ராணி’ படத்தின் நாயகியான நயன்தாரா தற்போது அட்லி இயக்கி வரும் ‘பிகில் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘பிகில்’ திரைப்படம் வெளியாக இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில் நயன்தாராவை இதுவரை புரமோஷனுக்கு படக்குழுவினர் பயன்படுத்தவே இல்லை. முழுக்க முழுக்க விஜய்யை மட்டுமே புரமோஷனுக்கு படக்குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அட்லி தனது டுவிட்டரில் விஜய் உடன் நயன்தாரா இருக்கும் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘என்னுடைய டார்லிங் நயன்தாரா நடித்த ”உனக்காக” என்ற பாடல், தன்னுடைய பேவரெட் பாடல் என்றும் இந்த பாடல் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த மெலடி பாடல் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web