பிகில் திரைப்படத்திற்கு எதிராக திடீரென போராடும் வியாபாரிகள்!

விஜய் நடித்த படம் என்றாலே சர்ச்சைக்குப் பஞ்சமிருக்காது என்பது தெரிந்ததே. அந்த வகையில் பிகில் படமும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்து அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் தற்போது அரசியல்வாதிகளை அடுத்து வியாபாரிகள் படத்திற்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். ர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் பிகில் படத்தின் போஸ்டரில் இறைச்சி
 

பிகில் திரைப்படத்திற்கு எதிராக திடீரென போராடும் வியாபாரிகள்!

விஜய் நடித்த படம் என்றாலே சர்ச்சைக்குப் பஞ்சமிருக்காது என்பது தெரிந்ததே. அந்த வகையில் பிகில் படமும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்து அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அரசியல்வாதிகளை அடுத்து வியாபாரிகள் படத்திற்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். ர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் பிகில் படத்தின் போஸ்டரில் இறைச்சி வெட்டும் கட்டை மீது கால் வைத்து விஜயை அமர்ந்திருப்பது தங்கள் தொழிலை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து அவர்கள் கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இரண்டு மாதங்கள் மேலான பின்னர் தற்போது திடீரென இறைச்சி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது அவர்களுக்கு பின்னணியில் வேறு யாரோ இருப்பதாக தெரிவதாக சமூக வலைதள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அரசியல்வாதிகளின் விமர்சனங்கள் மற்றும் வியாபாரிகளின் போராட்டங்கள் இந்த படத்திற்கு விளம்பரமாக தான் அமையும் என்று கூறப்படுகிறது

From around the web