பிக் பாஸ் வீட்டின் மன்னராக பதவி ஏற்றார் தர்ஷன்

ஆல்வேஸ் ஜாலிடே என்ற பாடலோடு பிக் பாஸ் வீட்டின் நேற்றைய நாள் புலர்ந்தது. இறுதிக் கட்டத்தினை நெருங்கவுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் பெரிதளவில் சண்டைகள் ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. உடைத்திடு, எடுத்திடு என்ற டாஸ்க்கினை பிக் பாஸ் கொடுத்தார். இந்த டாஸ்க்கில் தர்ஷன் அதிகபட்சமாக 14 பலூன்கள் உடைத்து முதலிடம் பிடித்துள்ளார். கோல்டன் டிக்கெட் கிடைக்காத சோகத்தில் உள்ள தர்ஷனுக்கு, உடைத்திடு எடுத்திடு டாஸ்க்கில் வெற்றி பெற்றதற்காக தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இந்தவாரம்
 
பிக் பாஸ் வீட்டின் மன்னராக பதவி ஏற்றார் தர்ஷன்

ஆல்வேஸ் ஜாலிடே என்ற பாடலோடு பிக் பாஸ் வீட்டின் நேற்றைய நாள் புலர்ந்தது. இறுதிக் கட்டத்தினை நெருங்கவுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் பெரிதளவில் சண்டைகள் ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

உடைத்திடு, எடுத்திடு என்ற டாஸ்க்கினை பிக் பாஸ் கொடுத்தார்.

பிக் பாஸ் வீட்டின் மன்னராக பதவி ஏற்றார் தர்ஷன்

இந்த டாஸ்க்கில் தர்ஷன் அதிகபட்சமாக 14 பலூன்கள் உடைத்து முதலிடம் பிடித்துள்ளார்.

கோல்டன் டிக்கெட் கிடைக்காத சோகத்தில் உள்ள தர்ஷனுக்கு, உடைத்திடு எடுத்திடு டாஸ்க்கில் வெற்றி பெற்றதற்காக தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இந்தவாரம் முழுதும் மன்னராக இருப்பார் என்று கூறப்பட்டது.

மற்ற போட்டியாளர்கள் மன்னருக்கு பணிவிடைகள் செய்ய வேண்டும், அதாவது  லோஸ்லியா மற்றும்  முகென் மன்னர் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

கவின் மற்றும் ஷெரின் மன்னர் எங்காவது செல்ல விரும்பினால் அவரை தூக்கி செல்ல அறிவுறுத்தப்பட்டது, சாண்டிக்கு மன்னரின் வருகையை அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டது, மேலும் அவரது புகழை எப்போதும் பாட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

மன்னர் ஓய்வெடுக்கும்போது அவருடைய வாயாக செயல்பட்டு மற்றவர்களை பணிகளை செய்ய வைக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

From around the web