தர்ஷன் வெளியேற காரணம் கூறிய கமல்: கதறி அழுத ஷெரின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று தர்ஷன் இன்று வெளியேற போவதாக ஏற்கனவே செய்தி வெளிவந்திருந்தாலும் சற்றுமுன் இதனை கமல் அதிகாரபூர்வமாக அறிவித்தார். கமல் அறிவித்ததும் ஆடியன்ஸ்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக ஷெரினால் இந்த முடிவை ஏற்று கொள்ளவே முடியவில்லை. கமல்ஹாசனிடம் அவர் ‘இது நியாயமே இல்லை’ என்று கூற அதற்கு கமல்ஹாசன் ஆடியன்ஸ் பக்கம் கைகாட்டினார். மேலும் தர்ஷன் வெளியேறுவது எனக்கு கூட அதிர்ச்சியாகத்தான் இருப்பதாகவும் ஆனால் இதற்கு காரணம் மக்கள் வாக்களித்ததே
 

தர்ஷன் வெளியேற காரணம் கூறிய கமல்: கதறி அழுத ஷெரின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று தர்ஷன் இன்று வெளியேற போவதாக ஏற்கனவே செய்தி வெளிவந்திருந்தாலும் சற்றுமுன் இதனை கமல் அதிகாரபூர்வமாக அறிவித்தார். கமல் அறிவித்ததும் ஆடியன்ஸ்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

குறிப்பாக ஷெரினால் இந்த முடிவை ஏற்று கொள்ளவே முடியவில்லை. கமல்ஹாசனிடம் அவர் ‘இது நியாயமே இல்லை’ என்று கூற அதற்கு கமல்ஹாசன் ஆடியன்ஸ் பக்கம் கைகாட்டினார். மேலும் தர்ஷன் வெளியேறுவது எனக்கு கூட அதிர்ச்சியாகத்தான் இருப்பதாகவும் ஆனால் இதற்கு காரணம் மக்கள் வாக்களித்ததே என்றும் கூறி அவர் தப்பித்தார்.

தர்ஷனை வெளியே விட லாஸ்லியாவும் ஷெரினும் விடவே இல்லை. ஆனால் தர்ஷன் சிரித்தபடியே அனைவருக்கும் விடை கொடுத்தார். தர்ஷன் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி போட்டிக்கு முந்தைய வாரம் அவர் வெளியேறுவது வருத்தமான விஷயமாக பார்க்கப்படுகிறது

From around the web