இந்த ஜென்மத்தில் முகினுக்கு இது நடக்கவே நடக்காது: ரேஷ்மா

பிக்பாஸ் வீட்டின் சிறப்பு விருந்தினர்களாக இன்று ரேஷ்மா, மோகன் வைத்யா, மிரா மிதுன் மற்றும் பாத்திமா பாபு ஆகியோர் வருகை தந்துள்ளதால் பிக்பாஸ் வீடே கலகலப்பாகி உள்ளது. அதே நேரத்தில் ரேஷ்மாவின் பேச்சால் வீடு உருக்கமாகவும் மாறிவிட்டது ஏற்கனவே வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த ரேஷ்மா உண்மையான அன்புக்காக ஏங்கியது குறித்து அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே பலமுறை கூறியுள்ளார். இந்த நிலையில் இன்று அவர் பிக்பாஸ் வீட்டில் பேசியபோது, ‘ ‘முகின் நீ இந்த ஜென்மத்துல
 

இந்த ஜென்மத்தில் முகினுக்கு இது நடக்கவே நடக்காது: ரேஷ்மா

பிக்பாஸ் வீட்டின் சிறப்பு விருந்தினர்களாக இன்று ரேஷ்மா, மோகன் வைத்யா, மிரா மிதுன் மற்றும் பாத்திமா பாபு ஆகியோர் வருகை தந்துள்ளதால் பிக்பாஸ் வீடே கலகலப்பாகி உள்ளது. அதே நேரத்தில் ரேஷ்மாவின் பேச்சால் வீடு உருக்கமாகவும் மாறிவிட்டது

ஏற்கனவே வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த ரேஷ்மா உண்மையான அன்புக்காக ஏங்கியது குறித்து அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே பலமுறை கூறியுள்ளார். இந்த நிலையில் இன்று அவர் பிக்பாஸ் வீட்டில் பேசியபோது, ‘ ‘முகின் நீ இந்த ஜென்மத்துல அனாதை ஆக முடியாது. அந்த அளவுக்கு வெளியே உனக்காக அன்பு காத்திருக்கின்றது. நீ வெளியே வந்தால் உனக்கே இது புரியும், நானும் உன் மீது உண்மையான அன்பு செலுத்துகிறேன் என்று கூறிய ரேஷ்மா அதன்பின், நாம எல்லாருமே அன்புக்காகத்தான் ஏங்குறோம், நானும் சரி, மிகினும் அனைவரும் சரி அன்புக்காக ஏங்குகிறோம்’ என்று கூறினார்

ரேஷ்மாவின் இந்த பாசமழையில் நனைந்த முகின், உடனே ஓடி வந்து ரேஷ்மாவை கட்டி அணைத்து கொண்டார். உடனே முகினுக்கு ரேஷ்மா வாழ்த்து கூறி டைட்டில் பட்டம் வெல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

From around the web