இன்று பிறந்த நாள் காணும் குஷ்புவுக்கு வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் குஷ்பு. முதலில் இவர் நடித்த திரைப்படம் தர்மத்தின் தலைவன். முதல் படம் ரஜினி படமாக இருந்தாலும் இரண்டாவதாக நடித்த வருஷம் 16 திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. வருஷம் 16 ல் வரும் பாந்தமான குஷ்புவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த நேரத்தில் தொடர் படங்களில் இவர் நடித்தார் மிகவும் பிஸியான நடிகையாக இருந்தார். இவரும் பிரபுவும் நடித்த சின்னத்தம்பி படம் மிகப்பெரிய வெற்றியை
 

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் குஷ்பு. முதலில் இவர் நடித்த திரைப்படம் தர்மத்தின் தலைவன். முதல் படம் ரஜினி படமாக இருந்தாலும் இரண்டாவதாக நடித்த வருஷம் 16 திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.

இன்று பிறந்த நாள் காணும் குஷ்புவுக்கு வாழ்த்துக்கள்

வருஷம் 16 ல் வரும் பாந்தமான குஷ்புவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த நேரத்தில் தொடர் படங்களில் இவர் நடித்தார் மிகவும் பிஸியான நடிகையாக இருந்தார்.

இவரும் பிரபுவும் நடித்த சின்னத்தம்பி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவரின் மார்க்கெட் அந்தஸ்து உயர்ந்தது. இவருக்கு திருச்சி, திருநெல்வேலியில் கோவில் கட்டினார்கள் அப்படி என்றால் இவரின் மார்க்கெட் அந்தஸ்து லெவலை பார்த்துக்கொள்ளுங்கள்.

ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ்,பிரபு, என அந்நாளைய முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் டூயட் பாடியவர் குஷ்பு.

இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பு. இப்போது தமிழ்நாடு காங்கிரஸில் முக்கிய தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.

இன்று குஷ்புவின் பிறந்த நாள் அவரை வாழ்த்துவோம்.

From around the web