பிக்பாஸ் வீட்டில் ஒரு காதல் திருமணம்: பைனல் நாளில் எதிர்பாருங்கள்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைந்துள்ள நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் இந்தி 13 நிகழ்ச்சி தொடங்கியது இந்த நிகழ்ச்சியையும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரஷாமி தேசாய் கலந்து கொண்டுள்ளார் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நந்திஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றவர் என்பதும் தற்போது இவர் அர்ஹான்கான் என்பவரை காதலித்து வருகிறார்
 

பிக்பாஸ் வீட்டில் ஒரு காதல் திருமணம்: பைனல் நாளில் எதிர்பாருங்கள்
Colorful Hindu wedding in India

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைந்துள்ள நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் இந்தி 13 நிகழ்ச்சி தொடங்கியது

இந்த நிகழ்ச்சியையும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரஷாமி தேசாய் கலந்து கொண்டுள்ளார்

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நந்திஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றவர் என்பதும் தற்போது இவர் அர்ஹான்கான் என்பவரை காதலித்து வருகிறார் என்பதும் பாலிவுட்டில் பரவி வரும் வதந்திகளில் ஒன்று

இந்த நிலையில் பிக்பாஸ் இந்தி 13 நிகழ்ச்சியில் இன்னும் சில வாரங்களில் அர்ஹன்கான் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வீட்டின் உள்ளேயே வரவிருப்பதாகவும், ரஷாமி தேசாய், அர்ஹான்கான் இருவருக்கும் பிக்பாஸ் வீட்டிலேயே திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது

நிகழ்ச்சியின் இறுதி நாளில் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர்கள் திருமணத்தை சல்மான்கானே முன்னிறுத்தி நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை ரஷாமி மறுத்துள்ளார். யாராவது பிக்பாஸ் வீட்டில் திருமணம் செய்து கொள்வார்களா? என்னுடைய திருமணம் நிச்சயம் ரசிகர்கள் முன்னிலையில் தான் நடைபெறும் என்று ரஷாமி கூறியுள்ளார்

From around the web