’எனை நோக்கி பாயும் தோட்டா’வின் இறுதி ரிலீஸ் தேதி!

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பில் சாதனை செய்திருக்கும் என்றே கருதப்படுகிறது இதுவரை இந்த படத்தின் பல ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் திடீர் திடீரென ஒத்தி வைக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த ரிலீஸ் தேதி நவம்பர் 15 என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் முடிந்துவிட்டதால் இந்த தேதி இறுதி ரிலீஸ் தேதி என்றும்,
 

’எனை நோக்கி பாயும் தோட்டா’வின் இறுதி ரிலீஸ் தேதி!

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பில் சாதனை செய்திருக்கும் என்றே கருதப்படுகிறது

இதுவரை இந்த படத்தின் பல ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் திடீர் திடீரென ஒத்தி வைக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த ரிலீஸ் தேதி நவம்பர் 15 என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் முடிந்துவிட்டதால் இந்த தேதி இறுதி ரிலீஸ் தேதி என்றும், அன்றைய தேதியில் நிச்சயம் இந்த படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘மறுவார்த்தை’ உள்பட அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web