‘பிகில்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் நடித்த ‘பிகில்’ படத்தின் டீசர் அல்லது டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டர் பக்கத்தில் ’பிகில்.’ டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இதன்படி‘பிகில்’ படத்தின் டிரைலர் அக்டோபர் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. டிரைலர் ரிலீஸ் ஆக இன்னும்
 

‘பிகில்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் நடித்த ‘பிகில்’ படத்தின் டீசர் அல்லது டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டர் பக்கத்தில் ’பிகில்.’ டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.

இதன்படி‘பிகில்’ படத்தின் டிரைலர் அக்டோபர் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. டிரைலர் ரிலீஸ் ஆக இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருப்பதால் இந்த ஐந்து நாட்களும் சமூக வலைத்தளங்கள் விஜய் ரசிகர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த்ள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

From around the web