ரஜினி-சிறுத்தை சிவா படத்தில் இணைகிறார் இமான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது சமீபத்தில் போயஸ் தோட்டம் சென்று ரஜினியை நேரில் சந்தித்து அவருக்கு கதையை சிறுத்தை சிவா கூறியதாகவும், ரஜினி நீண்ட இடைவெளிக்குப்பின் நடிக்கவிருக்கும் கிராமத்து கதைதான் இந்த படம் என்றும் இந்தப் படத்தில் ஆக்ஷன் அதிகம் இல்லாமல் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட் இருக்கும் என்றும் கூறப்படுகிறது தொடர்ந்து ஆக்ஷன் படத்தில் நடித்து வந்ததால் ஒரு வித்தியாசமாக
 

ரஜினி-சிறுத்தை சிவா படத்தில் இணைகிறார் இமான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது

சமீபத்தில் போயஸ் தோட்டம் சென்று ரஜினியை நேரில் சந்தித்து அவருக்கு கதையை சிறுத்தை சிவா கூறியதாகவும், ரஜினி நீண்ட இடைவெளிக்குப்பின் நடிக்கவிருக்கும் கிராமத்து கதைதான் இந்த படம் என்றும் இந்தப் படத்தில் ஆக்ஷன் அதிகம் இல்லாமல் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

தொடர்ந்து ஆக்ஷன் படத்தில் நடித்து வந்ததால் ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இந்த படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் இசையமைக்க டி இமான் அவர்களை சிறுத்தை சிவா பரிந்துரை செய்ததாகவும் அதற்கு ரஜினி ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது

எனவே ரஜினி, சிறுத்தை சிவா மற்றும் இமான் கூட்டணி விரைவில் இணையவிருக்கும் அதிகாரப்பூர்வ செய்தியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்

From around the web