பிகில் தயாரிப்பாளருக்கு வாழ்த்து மழை பொழிந்த அட்லி

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய், நயன் தாரா நடிப்பில் வரும் தீபாவளியை ஒட்டி அதற்கு முன்னதாகவே 25ம்தேதி ரிலீஸ் ஆகிறது பிகில் படம். ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தை தயாரித்திருப்பது, ஏஜிஎஸ் பிலிம்ஸ் இதன் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம். இதன் நிர்வாகி அவரின் மகள் அர்ச்சனா கல்பாத்தி. இவர் விஜயின் தீவிர ரசிகை ஆவார். விஜய் படத்தை தயாரிப்பதால் இவரின் ஒத்துழைப்பு படத்துக்கு அதிகம் இருந்தது. ஆடியோ வெளியீட்டுக்கும் இவரின் உழைப்பு அதிகம்
 

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய், நயன் தாரா நடிப்பில் வரும் தீபாவளியை ஒட்டி அதற்கு முன்னதாகவே 25ம்தேதி ரிலீஸ் ஆகிறது பிகில் படம்.

பிகில் தயாரிப்பாளருக்கு வாழ்த்து மழை பொழிந்த அட்லி

ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தை தயாரித்திருப்பது, ஏஜிஎஸ் பிலிம்ஸ் இதன் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம். இதன் நிர்வாகி அவரின் மகள் அர்ச்சனா கல்பாத்தி. இவர் விஜயின் தீவிர ரசிகை ஆவார்.

விஜய் படத்தை தயாரிப்பதால் இவரின் ஒத்துழைப்பு படத்துக்கு அதிகம் இருந்தது. ஆடியோ வெளியீட்டுக்கும் இவரின் உழைப்பு அதிகம் இருந்தது.

ஒரு படத்தில் இயக்குனருக்கு பிறகு தயாரிப்பாளர் பெயர் அதிகம் மீடியாக்களில் அடிபட்டது இவரது பெயராகத்தான் இருக்கும்.இவரின் பிறந்த நாளையொட்டி பிகில் பட இயக்குனர் அட்லி அர்ச்சனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.நான் மதிக்கும் ஒரு பெண் நீங்க- உங்க கடின உழைப்பு, லட்சியம் மற்றும் ஆதரவு அனைத்திற்கும் முழுவதும் நன்றி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி, இந்த ஆண்டு எனக்கு பெரியது என கூறியுள்ளார்.

From around the web