நாய்கள் குரைப்பதற்காக கார்கள் நிற்பதில்லை! சேரனுக்கு விவேக் அறிவுரை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதலுக்கு ஒரு தந்தை ஸ்தானத்தில் எதிர்ப்பு தெரிவித்த சேரனுக்கு கவின் ஆர்மியும் லாஸ்லியா ஆர்மியும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் சேரனை மிக மோசமாக காயப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து சேரன் தனது டுவிட்டரில், ‘ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும்நிலை வளர்ந்துவிட்டது.. சிலரின் மனதில் காட்டுப்பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்று
 

நாய்கள் குரைப்பதற்காக கார்கள் நிற்பதில்லை! சேரனுக்கு விவேக் அறிவுரை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதலுக்கு ஒரு தந்தை ஸ்தானத்தில் எதிர்ப்பு தெரிவித்த சேரனுக்கு கவின் ஆர்மியும் லாஸ்லியா ஆர்மியும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் சேரனை மிக மோசமாக காயப்படுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து சேரன் தனது டுவிட்டரில், ‘ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும்நிலை வளர்ந்துவிட்டது.. சிலரின் மனதில் காட்டுப்பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்று கூறியிருந்தார்.

நாய்கள் குரைப்பதற்காக கார்கள் நிற்பதில்லை! சேரனுக்கு விவேக் அறிவுரை

சேரனின் இந்த கருத்து குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டரில், ‘சேரன் சார்! உயர்ந்த நேர்மறைகளை பதிவிட்டு, எதிர்மறைகளை அலட்சியப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். நாய்கள் குரைப்பதற்காக கார்கள் நிற்பதில்லை! என்று அறிவுரை கூறியுள்ளார்.

From around the web