’பிகில்’ தீபாவளிக்கு உண்டா? இல்லையா? நாளை தீர்ப்பு

விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நாளை தீர்ப்பு வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ’பிகில்’ படத்துக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு நாளை மதியம் 2.15 மணிக்கு சென்னை நீதிமன்றம் வழங்க உள்ளதாகவும், இந்த தீர்ப்பை பொருத்தே பிகில் தீபாவளிக்கு உண்டா? இல்லையா? என்பது தெரியும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. ரூ.180 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட
 

’பிகில்’ தீபாவளிக்கு உண்டா? இல்லையா? நாளை தீர்ப்பு

விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நாளை தீர்ப்பு வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

’பிகில்’ படத்துக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு நாளை மதியம் 2.15 மணிக்கு சென்னை நீதிமன்றம் வழங்க உள்ளதாகவும், இந்த தீர்ப்பை பொருத்தே பிகில் தீபாவளிக்கு உண்டா? இல்லையா? என்பது தெரியும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

ரூ.180 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு வந்தால் மட்டுமே லாபத்தை தரும் படமாக இருக்கும் என்றும் ஒருவேளை தீபாவளியை இந்த படம் மிஸ் செய்தால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது

இதுபோன்ற பல கதைத்திருட்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் பிகில் படக்குழுவினர்களும், விஜய் ரசிகர்களும் இந்த படம் தீபாவளிக்கு வரும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக தெரிகிறது

From around the web