பிகில் படத்திற்கு இரண்டே ரசிகர்கள்: காட்சியை ரத்து செய்த தியேட்டர் நிர்வாகம்!

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் நேற்று இந்த படம் வெளியாகி 6 நாட்கள் மட்டுமே ஆகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு 10.45 மணி காட்சியை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கம் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது இந்த காட்சிக்கு வெறும் இரண்டு ரசிகர்கள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதாகவும், கவுண்ட்டரில் ஒரு ரசிகர் கூட டிக்கெட் எடுக்க வரவில்லை என்பதால் இரண்டு பேருக்காக படத்தை ஓட்ட முடியாது
 

பிகில் படத்திற்கு இரண்டே ரசிகர்கள்: காட்சியை ரத்து செய்த தியேட்டர் நிர்வாகம்!

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் நேற்று இந்த படம் வெளியாகி 6 நாட்கள் மட்டுமே ஆகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு 10.45 மணி காட்சியை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கம் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது

இந்த காட்சிக்கு வெறும் இரண்டு ரசிகர்கள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதாகவும், கவுண்ட்டரில் ஒரு ரசிகர் கூட டிக்கெட் எடுக்க வரவில்லை என்பதால் இரண்டு பேருக்காக படத்தை ஓட்ட முடியாது என்பதால் காட்சி ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது

ஒரு பக்கம் பிகில் திரைப்படம் வெளியான ஐந்தே நாட்களில் ரூபாய் 200 கோடி வசூல் செய்ததாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தியேட்டரில் ஆள் இல்லாததால் காட்சி ரத்து செய்யப்படுவதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இருப்பினும் நேற்று சென்னை முழுவதும் நல்ல மழை பெய்து பெய்ததன் காரணமாகவே தியேட்டருக்கு யாரும் வரவில்லை என்றும் பிகில் படம் மற்ற நகரங்களிலும் மற்ற திரையரங்குகளிலும் ரசிகர்கள் ஆதரவுடனும் ஓடி வருகிறது என்றும் ரசிகர்கள் தரப்பிலிருந்து தெரிவித்து வருகின்றனர்

From around the web