பழம்பெரும் தமிழ் நடிகை கீதாஞ்சலி காலமானார்: திரையுலக பிரபலங்கல் இரங்கல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி என்பவர் நேற்று காலமானார். அவர் மாரடைப்பால் காலமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன தமிழில் சாரதா என்ற படத்தில் 1962 ஆம் ஆண்டு நடிக்கத் தொடங்கிய நடிகை கீதாஞ்சலி அதன் பின்னர் தெய்வத்தின் தெய்வம், தாயின் மடியில், பணம் படைத்தவன், வாழ்க்கை படகு, ஆசை முகம், அதே கண்கள், நெஞ்சிருக்கும் வரை, அன்பளிப்பு, என் அண்ணன், அன்னமிட்டகை, போன்ற எம்ஜிஆர் –
 

பழம்பெரும் தமிழ் நடிகை கீதாஞ்சலி காலமானார்: திரையுலக பிரபலங்கல் இரங்கல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி என்பவர் நேற்று காலமானார். அவர் மாரடைப்பால் காலமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன

தமிழில் சாரதா என்ற படத்தில் 1962 ஆம் ஆண்டு நடிக்கத் தொடங்கிய நடிகை கீதாஞ்சலி அதன் பின்னர் தெய்வத்தின் தெய்வம், தாயின் மடியில், பணம் படைத்தவன், வாழ்க்கை படகு, ஆசை முகம், அதே கண்கள், நெஞ்சிருக்கும் வரை, அன்பளிப்பு, என் அண்ணன், அன்னமிட்டகை, போன்ற எம்ஜிஆர் – சிவாஜி ஆகியவர்களுடன் நடித்துள்ளார்

அதேபோல் மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் மிக அதிக அளவில் நடிகை கீதாஞ்சலி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தெலுங்கு நடிகர் ராமகிருஷ்ணா என்பவருடன் ஒரு சில படங்களில் நடித்த நடிகை கீதாஞ்சலி, அவரையே திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கீதாஞ்சலியின் மகன் தற்போது ஒருசில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web