பெண்கள் குறித்து கே.பாக்யராஜ் சர்ச்சை பேச்சு: மகளிர் அமைப்புகள் பொங்குமா?

நாட்டில் நடக்கும் பாலியல் பிரச்சினைகள் பலவற்றுக்கு பெண்கள் தான் காரணம் என்று கே பாக்யராஜ் பேசிய பேச்சுக்கு பெண்கள் அமைப்பிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் பேசிய கே.பாக்கியராஜ், ‘ஆண்கள் சின்ன வீடு உட்பட பல தவறுகள் செய்தாலும் பெரிய வீட்டை எந்தவித தொந்தரவும் செய்ய மாட்டார்கள் என்றும் ஆனால் பெண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு துணிவார்கள் என்றும் எனவே பெண்கள் தவறும்
 

நாட்டில் நடக்கும் பாலியல் பிரச்சினைகள் பலவற்றுக்கு பெண்கள் தான் காரணம் என்று கே பாக்யராஜ் பேசிய பேச்சுக்கு பெண்கள் அமைப்பிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது

சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் பேசிய கே.பாக்கியராஜ், ‘ஆண்கள் சின்ன வீடு உட்பட பல தவறுகள் செய்தாலும் பெரிய வீட்டை எந்தவித தொந்தரவும் செய்ய மாட்டார்கள் என்றும் ஆனால் பெண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு துணிவார்கள் என்றும் எனவே பெண்கள் தவறும் போது குடும்பத்தில் விபரீதம் நடக்கும் என்பதால் பெண்கள் கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும் என்றும் கே பாக்யராஜ் பேசினார்

மேலும் ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்பது உண்மையான ஒரு விஷயம் என்றும் பெண்கள் இடம் கொடுக்காமல் எந்த பாலியல் குற்றங்களும் நடக்க வாய்ப்பில்லை என்றும் உதாரணமாக பொள்ளாச்சி விஷயத்தில்கூட ஆண்கள் மீது மட்டும் தவறு சொல்லி பிரயோஜனம் இல்லை என்றும் அதற்கு பெண்களின் வீக்னசும் ஒரு காரணம் என்றும் பெண்கள் இடம் கொடுத்ததால்தான் ஆண்கள் தவறுகளை செய்தார்கள் என்றும் கூறியுள்ளார்
மேலும் செல்போன்கள் வந்த பின்னர்தான் நாட்டில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பாக பெண்கள் செல்போன்களை தவறாக பயன்படுத்துவதாக அவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியது உள்ளாகியுள்ளது. பாக்யராஜின் இந்த பேச்சுக்கு பெண்களிடம் இருந்து எனவிதமான ரியாக்சன்கள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web