அதர்வாவுடன் தர்ஷன் எடுத்த புகைப்படம் வைரலாவது ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பெரும் புகழ்பெற்ற தர்ஷன் சமீபத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அதர்வாவுடன் இணைந்து அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் அதர்வாவுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில நாட்களிலேயே நடிகர் அதர்வா
 

அதர்வாவுடன் தர்ஷன் எடுத்த புகைப்படம் வைரலாவது ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பெரும் புகழ்பெற்ற தர்ஷன் சமீபத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அதர்வாவுடன் இணைந்து அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் அதர்வாவுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில நாட்களிலேயே நடிகர் அதர்வா போல் இருப்பதாக பலர் கமெண்ட் அளித்தனர். இந்த கமெண்ட்டுகளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்ன தர்ஷன் பார்த்து ஆச்சரியப்பட்டார். உண்மையிலேயே தான் அதர்வா போல் இருப்பதாக கருதிய தர்ஷன், அதர்வாவுடன் இணைந்து ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று தனது விருப்பத்தையும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில்தான் சமீபத்தில் நடந்த விழாவில் அதர்வாவுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்த பல ரசிகர்கள் இருவரும் இரட்டையர்கள் போல் இருப்பதாகவும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்

நல்ல கதை அமைந்தால் இயக்குநர் தங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்போம் என்று தர்ஷன் கூறியுள்ளார்

From around the web