புதிய பாடகர்கள் குறித்து வித்யாசாகர் வருத்தம்

இசையமைப்பாளர் வித்யாசாகர் நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். இசையமைப்பாளராக தமிழில் ஜெய்ஹிந்த் படத்தில் அறிமுகமானாலும் அதற்கு முன்பே இளையராஜா, எஸ்.ஏ ராஜ்குமார் உள்ளிட்ட பலரிடம் இசைக்கலைஞராக பணியாற்றியுள்ளார். 12 வயது முதலே இவர் இசைக்கலைஞராக பணியாற்றி வருகிறாராம். இவர் புதிய பாடகர்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறி இருப்பது என்னவென்றால், நிறைய புதிய புதிய பாடகர்கள் வருகிறார்கள் நன்றாக பாடுகிறார்கள் பாடலும் ஹிட் ஆகி விடுகிறது. சில பல வருடங்களில் அவர்களை காணவில்லை அவர்களால்
 

இசையமைப்பாளர் வித்யாசாகர் நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். இசையமைப்பாளராக தமிழில் ஜெய்ஹிந்த் படத்தில் அறிமுகமானாலும் அதற்கு முன்பே இளையராஜா, எஸ்.ஏ ராஜ்குமார் உள்ளிட்ட பலரிடம் இசைக்கலைஞராக பணியாற்றியுள்ளார். 12 வயது முதலே இவர் இசைக்கலைஞராக பணியாற்றி வருகிறாராம்.

புதிய பாடகர்கள் குறித்து வித்யாசாகர் வருத்தம்

இவர் புதிய பாடகர்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறி இருப்பது என்னவென்றால், நிறைய புதிய புதிய பாடகர்கள் வருகிறார்கள் நன்றாக பாடுகிறார்கள் பாடலும் ஹிட் ஆகி விடுகிறது. சில பல வருடங்களில் அவர்களை காணவில்லை அவர்களால் நிலைத்து நிற்கவும் முடியவில்லை.

ஆனால் அப்போது இருந்த பழைய பாடகர்களின் பாடல்களில் ஒரு தனித்தன்மை இருந்தது அன்றும் இன்றும் ஜேசுதாஸ் ஜானகி பாடல்கள் கேட்டுட்டு இருக்கோம். இப்ப இருக்கிற பாடகர்கள் ஒரே ஸ்டைலிலேயே பாடுவதால் நன்றாக இருந்தாலும் சில வருடங்களுக்கு மேல் அவற்றை கேட்க முடியவில்லை என கூறியுள்ளார் வித்யாசாகர்.

From around the web