இயக்குனர் கே.பாக்யராஜ் கைது செய்யப்படுவாரா? பெரும் பரபரப்பு

நேற்று சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசியதற்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் தற்போது ஆந்திர மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவர் வாசிரெட்டி பத்மா என்பவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்கு பெண்கள் தான் முக்கிய காரணம் என இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியது இந்திய பெண்களை கீழ்த்தரமாக விமர்சிக்கும் செயல் என்றும், தமிழக பெண்கள் ஆணையத்தின் தலைவர் இந்த விவகாரத்தை மேல் இடத்திற்கும்
 

நேற்று சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசியதற்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் தற்போது ஆந்திர மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவர் வாசிரெட்டி பத்மா என்பவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்கு பெண்கள் தான் முக்கிய காரணம் என இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியது இந்திய பெண்களை கீழ்த்தரமாக விமர்சிக்கும் செயல் என்றும், தமிழக பெண்கள் ஆணையத்தின் தலைவர் இந்த விவகாரத்தை மேல் இடத்திற்கும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

மேலும் பாக்யராஜ் மீது பெண்கள் அமைத்துக் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆந்திர மாநில போலீசாரிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த வழக்கில் பாக்யராஜ் கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

எதார்த்தமாக கூறிய ஒரு கருத்து இந்த அளவுக்கு பிரச்சனையாக இருப்பது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web