ஜெயலலிதாவின் குயின் படத்தில் இணைந்த இன்னொரு நாயகி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் 3 இயக்குனர்கள் இயக்கி வருவது தெரிந்ததே. அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான குயின் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ஜெயலலிதா கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் நடித்து வரும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் சிறுவயது கேரக்டரில் ’என்னை அறிந்தால்’ ’விஸ்வாசம்’ படத்தில் நடித்த அங்கீதாவும், ஜெயலலிதாவின் இளமையான தோற்றத்தில் அஞ்சனாவும் நடித்து வருகின்றனர். ஜெயலலிதா அரசியலுக்கு
 

ஜெயலலிதாவின் குயின் படத்தில் இணைந்த இன்னொரு நாயகி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் 3 இயக்குனர்கள் இயக்கி வருவது தெரிந்ததே. அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான குயின் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ஜெயலலிதா கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் நடித்து வரும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் சிறுவயது கேரக்டரில் ’என்னை அறிந்தால்’ ’விஸ்வாசம்’ படத்தில் நடித்த அங்கீதாவும், ஜெயலலிதாவின் இளமையான தோற்றத்தில் அஞ்சனாவும் நடித்து வருகின்றனர். ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பின் உள்ள தோற்றத்தில்தான் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஜெயலலிதாவின் குயின் படத்தில் இணைந்த இன்னொரு நாயகி

இந்த நிலையில் ஜெயலலிதாவின் சிறுவயது தோற்றத்தில் நடிக்கும் அங்கிதாவின் தாயாராக நடிக்க நடிகை சோனியா அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இவர் ’காதல் கொண்டேன்’, ‘கோவில்’ உள்பட பல தமிழ் படங்களில் நாயகியாக நடித்தவர் என்பதும் சமீபத்தில் வெளியான ’தடம்’ மற்றும் ’அயோக்கியா’ ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web