தலைமுறைகளை தாண்டும் ரஜினி- இன்று பிறந்த நாள் காணும் ரஜினி

தமிழ் சினிமாவில் எளியதொரு கதாபாத்திரத்தில் கம்பி போட்ட கதவை திறந்து அபூர்வ ராகங்களில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் படங்கள் எண்பதுகளில் பிறந்தவர்களுக்கும் இன்று இன்று இருக்கும் யங் ஜெனரேஷனுக்கும் மிகுந்த கொண்டாட்ட மனநிலையை கொடுத்தது கொடுத்து வருகிறது என்றால் மிகையாகாது. ரஜினிகாந்தின் படங்கள் ரிலீஸ் ஆகும் வெள்ளிக்கிழமைகள் எல்லாம் கொண்டாட்டமாகி இருந்தது அந்தக்காலம். ரஜினி மிகவும் பரபரப்பில் இருந்த காலகட்டம் 85ல் இருந்துதான் ஆரம்பமானது. படிக்காதவன், நான் சிகப்பு மனிதன், ராகவேந்திரா, தம்பிக்கு எந்த ஊரு, மாவீரன்,
 

தமிழ் சினிமாவில் எளியதொரு கதாபாத்திரத்தில் கம்பி போட்ட கதவை திறந்து அபூர்வ ராகங்களில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் படங்கள் எண்பதுகளில் பிறந்தவர்களுக்கும் இன்று இன்று இருக்கும் யங் ஜெனரேஷனுக்கும் மிகுந்த கொண்டாட்ட மனநிலையை கொடுத்தது கொடுத்து வருகிறது என்றால் மிகையாகாது.

தலைமுறைகளை தாண்டும் ரஜினி- இன்று பிறந்த நாள் காணும் ரஜினி

ரஜினிகாந்தின் படங்கள் ரிலீஸ் ஆகும் வெள்ளிக்கிழமைகள் எல்லாம் கொண்டாட்டமாகி இருந்தது அந்தக்காலம். ரஜினி மிகவும் பரபரப்பில் இருந்த காலகட்டம் 85ல் இருந்துதான் ஆரம்பமானது.

படிக்காதவன், நான் சிகப்பு மனிதன், ராகவேந்திரா, தம்பிக்கு எந்த ஊரு, மாவீரன், மாப்பிள்ளை, குரு சிஷ்யன், ராஜாதிராஜா, ராஜா சின்ன ரோஜா, மனிதன், சிவா என கலர் கலரான கலர்புல் படங்களும் ரஜினியின் ஸ்டைலான போஸ்களும் ரசிகர்களை கவர்ந்திழுத்து ரஜினியின் படங்களை பார்க்க தூண்டின என்றால் மிகையாகாது.

ரஜினி கர்நாடாகாக்காரர் தமிழர் அல்ல, தூத்துக்குடி பிரச்சினையில் ரஜினியின் கருத்து, நிருபர்களிடம் கோபப்பட்டது, அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என குழப்பி கொண்டே இருப்பது, என பல வருடங்களாக சில பிரச்சினைகள் ரஜினியை பற்றி சுற்றி கொண்டு இருந்தாலும் அடுத்து ஒரு ரஜினி பட டிரெய்லர் ரிலீஸ் ஆனால் அது எப்படித்தான் இருக்கும் என்று பார்ப்போம் என நினைக்க வைத்து அதை பார்க்க வைத்திருப்பதுதான் ரஜினி என்ற எளிய மனிதரின் சாதனை.

ஆன்மிகரீதியாக ஸ்ரீராகவேந்திரர், திருவண்ணாமலை சிவன் கோவில்,ருத்ராட்சை,பாபாஜி, இமயமலை, காளிகாம்பாள் கோவில்,பாம்பன் சுவாமிகள் அதிர்ஷ்டானம் திருவான்மியூர் என பல வருடங்களாக ஆன்மிக ரீதியாக சிலருக்கு மட்டுமே தெரிந்த விசயங்களை பலருக்கும் தெரிய வைத்தவர் ரஜினிகாந்த் என்றால் மிகையாகாது.

இது போல பெரிய பாக்கியம் எவ்வளவு பெரிய விஐபிக்கும் பிரபலத்துக்கும் கிடைக்காது. இறைவன் நாடினால் மட்டுமே கிடைக்கும். கடவுளின் ஒரு சிறு தூதுவன் போல இறை வழிபாடுகளை அனைத்து மக்களிடத்திலும் எடுத்து செல்லும் ஒரு எளியவனே ரஜினிகாந்த்.

அது போல மிகப்பெரும் பாக்கியத்தை ரஜினிகாந்துக்கு கடவுள் அருளி இருக்கிறார் என தான் சொல்ல வேண்டும்.

இரண்டு வயது குழந்தை கூட ரஜினியின் படங்களை ரசிக்கிறது. 40 வருடங்கள் முன் அறிமுகமான நடிகர் வயதானவர் நம் தலைமுறை நடிகர் இல்லை என அந்த குழந்தைக்கு தெரியாமல் ரஜினியின் பேட்ட பாடல் டிவியில் வந்தால் ரசிக்கும் குழந்தையை பார்க்கும்போது எப்படி ரஜினி காலம் கடந்தும் இன்றும் அனைவரையும் கவர்கிறார் என்று ஆச்சரியப்படுத்துகிறார்.

ரஜினிகாந்த் இன்னும் நல் வளங்களை வாழ்வில் பெற்று இன்னும் நூறாண்டுகள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறோம்.

From around the web