ரஜினியின் தர்பார் படத்தில் சன் நிறுவனத்தின் கனெக்சன்!

சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள தர்பார் திரைப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பின்னணி இசை மற்றும் டப்பிங் ஆகிய பணிகள் தற்போது முடிந்து விட்டதாகவும், அடுத்தகட்டமாக கிராபிக்ஸ் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது இந்த நிலையில் நேற்று தர்பார் படத்தின் டிரைலர் வெளியானதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தை ரிலீஸ் உரிமையை பெற பல
 
ரஜினியின் தர்பார் படத்தில் சன் நிறுவனத்தின் கனெக்சன்!

சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள தர்பார் திரைப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பின்னணி இசை மற்றும் டப்பிங் ஆகிய பணிகள் தற்போது முடிந்து விட்டதாகவும், அடுத்தகட்டமாக கிராபிக்ஸ் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் நேற்று தர்பார் படத்தின் டிரைலர் வெளியானதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தை ரிலீஸ் உரிமையை பெற பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

முதல் கட்டமாக தர்பார் படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு சன் டிவி நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பேட்ட படத்தை தயாரித்த சன் நிறுவனம் ரஜினியின் அடுத்த படமான ’தலைவர் 168’ படத்தையும் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் தர்பார் படத்தின் சாட்டிலைட் உரிமையையும் இந்நிறுவனமே வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web