தம்பி படம் எப்படி உள்ளது

கார்த்தி நடிப்பில் தம்பி படம் இன்று ரிலீசாகி உள்ளது. இருப்பினும் ஆங்கில பத்திரிக்கைகள் சில ப்ரீமியர் ஷோ பார்த்துவிட்டு தங்களது விமர்சனங்களை வெளியிட்டுள்ளன. ஜீது ஜோசப் இயக்கத்தில் நான்கு வருடங்களுக்கு பிறகு வரும் படம் இது. சத்யராஜ் தனது மகனை நீண்ட நாட்கள் காணவில்லை என தேடி வரும் நிலையில் மகனாக கார்த்தி வந்து சேருவதும், அவர் உண்மையான மகன் இல்லை என அடுத்தடுத்த காட்சிகளில் உணர்த்துவதுமாக நகர்கிறதாம் படம். நடுவில் நிகிலா விமலுடன் கார்த்திக்கு ஒரு
 

கார்த்தி நடிப்பில் தம்பி படம் இன்று ரிலீசாகி உள்ளது. இருப்பினும் ஆங்கில பத்திரிக்கைகள் சில ப்ரீமியர் ஷோ பார்த்துவிட்டு தங்களது விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.

தம்பி படம் எப்படி உள்ளது

ஜீது ஜோசப் இயக்கத்தில் நான்கு வருடங்களுக்கு பிறகு வரும் படம் இது. சத்யராஜ் தனது மகனை நீண்ட நாட்கள் காணவில்லை என தேடி வரும் நிலையில் மகனாக கார்த்தி வந்து சேருவதும், அவர் உண்மையான மகன் இல்லை என அடுத்தடுத்த காட்சிகளில் உணர்த்துவதுமாக நகர்கிறதாம் படம்.

நடுவில் நிகிலா விமலுடன் கார்த்திக்கு ஒரு காதல்,அக்கா ஜோதிகாவின் பாசம் என முதல் பாதி விறுவிறுப்பில்லாமல் போகிறதாம்.

இரண்டாம் பாதியில் நிறைய சஸ்பென்ஸ்கள் டுவிஸ்ட்கள் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வந்து நம்மை சீட்டை விட்டு நிமிர வைக்கின்றன என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

முக்கியமாக அமைதியான பழங்குடியினருக்காக இரக்கப்படும் கேரக்டரில் அமைதியானவராக காட்டப்படும் சத்யராஜ் கேரக்டர் இடைவேளைக்கு பிறகு வேற லெவலில் உள்ளதாம் அது சஸ்பென்ஸ்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை செளகார் ஜானகி இப்படத்தில் நல்லதொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதி படத்துக்கு பிறகு கார்த்திக்கு நடிக்க கிடைத்த மற்றொரு நல்ல திரைப்படம்இது என்பது விமர்சகர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

From around the web