ரஜினி அனுமதி இன்றி எந்த நிகழ்விலும் பங்கேற்க மாட்டேன் – லாரன்ஸ்

நடிகர் லாரன்ஸ் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் பிறந்த நாளையொட்டி நடந்த மக்கள் மன்ற விழாவில் பேசினார். அப்போது நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை விமர்சனம் செய்தார். ரஜினி குறித்து சீமான் பேசும் பல பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அது இருந்தது. இருப்பினும் இந்த விசயங்கள் லேசாக சர்ச்சையானது. ரஜினி பேச சொல்லியதால்தான் இவர் இப்படி பேசுகிறார் எனவும் ரஜினிக்கான மேடையை தனக்கான மேடையாக்கி கொண்டார் எனவும் இவர் பற்றி விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதை முற்றிலும்
 

நடிகர் லாரன்ஸ் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் பிறந்த நாளையொட்டி நடந்த மக்கள் மன்ற விழாவில் பேசினார். அப்போது நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை விமர்சனம் செய்தார்.

ரஜினி அனுமதி இன்றி எந்த நிகழ்விலும் பங்கேற்க மாட்டேன் – லாரன்ஸ்

ரஜினி குறித்து சீமான் பேசும் பல பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அது இருந்தது. இருப்பினும் இந்த விசயங்கள் லேசாக சர்ச்சையானது.

ரஜினி பேச சொல்லியதால்தான் இவர் இப்படி பேசுகிறார் எனவும் ரஜினிக்கான மேடையை தனக்கான மேடையாக்கி கொண்டார் எனவும் இவர் பற்றி விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதை முற்றிலும் மறுத்துள்ளார் லாரன்ஸ்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பதிவில், லாரன்ஸ் கூறியிருப்பதாவது “நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு சிறிய விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இனிமேல் தலைவரின் அனுமதியின்றி அவரது எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டேன். இதற்குப் பின்னால் நான் பகிர்ந்து கொள்ளவிரும்பாத பல காரணங்கள் உள்ளன. எனக்கு அவரது ஆசிர்வாதம்தான் மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.

From around the web