தர்பாரில் அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசை: வைரலாகும் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். இந்த படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமானமாக வெளியாக உள்ளது இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதை அடுத்து இந்த படத்தின் பின்னணி இசை உள்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த நிலையில்
 
தர்பாரில் அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசை: வைரலாகும் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். இந்த படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமானமாக வெளியாக உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதை அடுத்து இந்த படத்தின் பின்னணி இசை உள்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சற்று முன்னர் ஆர் முருகதாஸ் தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்த வீடியோவில் அனிருத் இந்த படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் காட்சிகள் உள்ளன. ரஜினியின் காட்சிகளுக்கு அதிரடியாக பின்னணி இசை அமைத்துள்ள அனிருத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது இந்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலானது மட்டுமின்றி லைக்ஸ்களும் ரீடுவிட்டுகளும் குவிந்து வருகிறது

ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

From around the web