சைக்கோ திரைவிமர்சனம்: சூப்பர் த்ரில் விருந்து

உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் இசைஞானியின் இசையில் உருவாகியிருக்கும் சைக்கோ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியான உதயநிதி ஸ்டாலின், எப்எம் வானொலியில் பணிபுரிந்துவரும் அதிதிராவ் ஹைத்ரியை காதலிக்கிறார். முதலில் காதலை மறுக்கும் அதிதி ராவ் பின்னர் அவருடைய உண்மையான காதலை புரிந்துகொண்டு காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதற்காக ஒரு இடத்திற்கு வரச் சொல்கிறார். அந்த இடத்திற்கு உதயநிதி ஸ்டாலின்
 

உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் இசைஞானியின் இசையில் உருவாகியிருக்கும் சைக்கோ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியான உதயநிதி ஸ்டாலின், எப்எம் வானொலியில் பணிபுரிந்துவரும் அதிதிராவ் ஹைத்ரியை காதலிக்கிறார். முதலில் காதலை மறுக்கும் அதிதி ராவ் பின்னர் அவருடைய உண்மையான காதலை புரிந்துகொண்டு காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதற்காக ஒரு இடத்திற்கு வரச் சொல்கிறார். அந்த இடத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வரும்போது திடீரென சைக்கோ கொலைகாரன் ஒருவனால் அதிதி ராவ் கடத்தப்படுகிறார். இதனை அறிந்த உதயநிதி, பார்வை இல்லாமல் இருந்தும் நித்யா மேனன் உதவியால் எப்படி தனது காதலியை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை

சைக்கோ திரைவிமர்சனம்: சூப்பர் த்ரில் விருந்து

உதயநிதி ஸ்டாலின் இதுவரை இல்லாத அளவில் மிக அற்புதமாக இந்த படத்தில் நடித்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது. கேரக்டருக்கு ஏற்ற நடிப்பு என்பதால் அவருடைய நடிப்பை ரசிக்க முடிகிறது. இந்த படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்றால் அது மிகையாகாது அதிதிராவ் ஹைத்ரிக்கு இந்த படத்தில் வெயிட்டான கேரக்டர். வில்லன் சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக்கொண்டு அவர் தவிக்கும் தவிப்பு வேறு எந்த நடிகையாலும் இவ்வாறு கொண்டுவர முடியுமா என்பது சந்தேகமே

நித்யா மேனனுக்கு பெரிய ரோல் இல்லை என்றாலும் கொடுக்கப்பட்ட வேலையை மிகச் சரியாக பயன்படுத்தி உள்ளார். சிறிது நேரமே வந்தாலும் அவரது நடிப்பு கண்முன் நிற்கிறது போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ராம், பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. ரோகினி நடிப்பு அபாரம் வழக்கம்போல் நன்றாக உள்ளது

இந்த படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருந்தாலும் இந்த படத்தை முழுக்க முழுக்க தூக்கி நிறுத்துவது இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை மட்டு.மே மிக அற்புதமான பின்னணி இசையை கொடுத்து படத்தை ரசிகர்கள் விறுவிறுப்பாக பார்க்கும் வகையில் செய்துள்ளார். குறிப்பாக ஒரு சில காட்சிகளில் எந்தவித பின்னணியும் இல்லாமல் மௌனமாக விட்டிருப்பது மிகச்சிறப்பு

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகள் சூப்பர். இயக்குனர் மிஷ்கின் ஒரு விறுவிறுப்பான திரைக்கதையை எழுதி இருந்தாலும் மிக அதிகமான வன்முறை காட்சிகளை படத்தில் புகுத்தி உள்ளதால் பெண்கள் மற்றும் குழந்தைகளை இந்த படத்தை பார்க்க வருவார்களா என்பது சந்தேகமே. இருந்தாலும் ஒரு நல்ல த்ரில் திரைப்படத்தை பார்த்த திருப்தி படம் முடிந்து வெளியே வரும்போது உள்ளது மிஷ்கினின் வெற்றியாக கருதப்படுகிறது

ரேட்டிங்: 3.25/5

From around the web