டுவிட்டர் வேண்டாம் இந்தியாவுக்கு தனி இணையதளம் உருவாக்க வேண்டும் -கங்கனா

கங்கனா ரணாவத் இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் ஹிந்தி படங்களில் அதிகம் கமிட்டாகி ஹிந்தி திரையுலக பிரபலமாக இவர் திகழ்ந்து வருகிறார். பாரதிய ஜனதா ஆதரவாளரான இவர் ஏதாவது அதிரடி கருத்தை வெளியிடுவார். இவரின் கருத்துக்கள் சில சர்ச்சைகளும் ஆக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இவரின் சகோதரி ட்விட்டரில், மொரதாபாதில் நடந்த கல்லெறி சம்பவத்தைக் குறிப்பிட்டு மத ரீதியான கருத்து பகிர்ந்ததால்,இதனால் கங்கணாவின் சகோதரி அவரது செய்தித் தொடர்பாளருமான
 

கங்கனா ரணாவத் இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் ஹிந்தி படங்களில் அதிகம் கமிட்டாகி ஹிந்தி திரையுலக பிரபலமாக இவர் திகழ்ந்து வருகிறார்.

டுவிட்டர் வேண்டாம் இந்தியாவுக்கு தனி இணையதளம் உருவாக்க வேண்டும் -கங்கனா

பாரதிய ஜனதா ஆதரவாளரான இவர் ஏதாவது அதிரடி கருத்தை வெளியிடுவார். இவரின் கருத்துக்கள் சில சர்ச்சைகளும் ஆக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இவரின் சகோதரி ட்விட்டரில், மொரதாபாதில் நடந்த கல்லெறி சம்பவத்தைக் குறிப்பிட்டு மத ரீதியான கருத்து பகிர்ந்ததால்,இதனால் கங்கணாவின் சகோதரி அவரது செய்தித் தொடர்பாளருமான ரங்கோலி சாண்டெலின் கணக்குகள் டுவிட்டரால் முடக்கப்பட்டது.

இதற்கு கருத்து தெரிவித்துள்ள கங்கனா தன் சகோதரிக்காக பேசியுள்ளார். ஹிரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் கானின் சகோதரி பாராகான் தானும் தன் சகோதரியும் தேசத்தில் இருக்கும் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று சொன்னதாக தானும், தன் சகோதரியும் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டதாக கூறியுள்ளார்.

மொரதாபாத் பிரச்சினைக்கு காரணமான குற்றவாளிகளைத்தான் நான் அவ்வாறு சொன்னோம். இஸ்லாமியர்களை குறித்து தனிப்பட்டு எதுவும் சொல்லவில்லை.

உடனே எங்களுடைய கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கி விட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் , பிஜேபிக்கு எதிரான தவறான கருத்துக்களை டுவிட்டர் அனுமதிக்கிறது.

இதற்காக தனியாக ஒரு சமூக வலைதளம் இந்தியாவிற்கென்று தனிப்பட்ட முறையில் இயங்க ஒரு சமூகவலைதளம் பிரத்யேகமாக ஆரம்பிக்க முயற்சி எடுக்க வேண்டும் என கங்கனா கூறியுள்ளார்.

From around the web