வெற்றி கிடைக்கும் வரை ஊர் செல்லாத இயக்குனர் பேரரசு- பிறந்த நாள் பதிவு

கடந்த 2005ம் வருடம் பொங்கல் ரிலீசாக வெளிவந்த படம் திருப்பாச்சி. இந்த படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். காரணம் விஜய் படத்துக்கு தேவையான மசாலா அயிட்டங்களை அள்ளி தெளித்திருந்தார் இயக்குனர் பேரரசு. படம் அவ்வளவு காரமாக வீரமாக இருந்தது அதனால் திருப்பாச்சி படம் பெரும் வெற்றியடைந்தது. அதன் மூலம் இயக்குனர் பேரரசு வெளியுலகம் தெரியலனார். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையை சேர்ந்த இவர் , சிறு வயதில் இருந்து படம் பார்த்து பார்த்து அந்த காட்சிகள்
 

கடந்த 2005ம் வருடம் பொங்கல் ரிலீசாக வெளிவந்த படம் திருப்பாச்சி. இந்த படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். காரணம் விஜய் படத்துக்கு தேவையான மசாலா அயிட்டங்களை அள்ளி தெளித்திருந்தார் இயக்குனர் பேரரசு. படம் அவ்வளவு காரமாக வீரமாக இருந்தது அதனால் திருப்பாச்சி படம் பெரும் வெற்றியடைந்தது. அதன் மூலம் இயக்குனர் பேரரசு வெளியுலகம் தெரியலனார்.

வெற்றி கிடைக்கும் வரை ஊர் செல்லாத இயக்குனர் பேரரசு- பிறந்த நாள் பதிவு

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையை சேர்ந்த இவர் , சிறு வயதில் இருந்து படம் பார்த்து பார்த்து அந்த காட்சிகள் எல்லாம் மனதில் நன்றாய் பதிந்து சினிமாவில் மசாலாத்தனமான காட்சிகளை அதிகம் வைத்து ஜனரஞ்சகமான ரசிகர்களிடம் எளிதில் சென்று சேர்ந்தார்.

இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக இருந்த இவர், பலவருடம் சினிமாவில் வெற்றிபெறாமல் ஊருக்கே வரக்கூடாது என்ற வெறியில் இருந்தவர். திருப்பாச்சி படம் வெற்றி பெற்ற பிறகே சொந்த ஊர் சென்றாராம்.

இயக்குனராக மட்டுமல்லாமல் பாடல் எழுதுவது, நடிப்பது என பல்வகை பரிமாணங்களை உடையவர் இவர்.

திருப்பாச்சி படத்துக்கு பிறகு சிவகாசி, திருப்பதி போன்ற படங்கள் இவரை மிகப்பெரிய சினிமா அந்தஸ்தை கொடுத்தது.

தொடர்ந்து திருத்தணி, பழனி, திருவண்ணாமலை, தர்மபுரி, திகார் வரை படங்களை இயக்கிய இவர் சில வருடங்களாக படம் எதுவும் இயக்கவில்லை.

தற்போதும் விஜயிடம் ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் விரைவில் அவர் அழைப்பார் என நம்பிக்கையுடன் உள்ளார் இவர்.

இன்று இவரின் பிறந்த நாள் – இயக்குனர் பேரரசு அவர்களுக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

From around the web