பிரபாகரனை இழிவுபடுத்தியதால் எஸ்.ஆர் பிரபாகரன் கோபம்- துல்கரிடம் காட்டமான கேள்வி

தமிழில் சுந்தரபாண்டியன், இவன் சத்ரியன், கதிர்வேலன் காதல் படங்களை இயக்கியவர் எஸ்.ஆர் பிரபாகரன். தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை இயக்கி முடித்துள்ளார். தமிழின பற்றாளரான இவர், சமீபத்தில் துல்கர் சல்மானின் படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்த விசயத்திற்கு தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார் அவரின் பதிவு. அன்பிற்குரிய @dulQuerSalmaan., & #AnupSathyan, உங்களின் சமீபத்திய வெளியீடான ” #VaraneAvashyamund ” எனும் மலையாள திரைப்படத்தில், நாய்க்கு “பிரபாகரன்” என்று பெயர் சூட்டி இருப்பதாக வரும் வசனம்
 

தமிழில் சுந்தரபாண்டியன், இவன் சத்ரியன், கதிர்வேலன் காதல் படங்களை இயக்கியவர் எஸ்.ஆர் பிரபாகரன். தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை இயக்கி முடித்துள்ளார்.

பிரபாகரனை இழிவுபடுத்தியதால் எஸ்.ஆர் பிரபாகரன் கோபம்- துல்கரிடம் காட்டமான கேள்வி

தமிழின பற்றாளரான இவர், சமீபத்தில் துல்கர் சல்மானின் படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்த விசயத்திற்கு தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார் அவரின் பதிவு.

அன்பிற்குரிய @dulQuer
Salmaan., & #AnupSathyan, உங்களின் சமீபத்திய வெளியீடான ” #VaraneAvashyamund ” எனும் மலையாள திரைப்படத்தில், நாய்க்கு “பிரபாகரன்” என்று பெயர் சூட்டி இருப்பதாக வரும் வசனம் பற்றியும் அதன் மூலம் எழுந்த சர்ச்சை பற்றியும், அதற்கு, மன்னிப்பா? அல்லது விளக்கமா என்று புரியாத வகையில் நீ அளித்த பதிவையும் சற்று முன்பே பார்க்கவும் படிக்கவும் நேர்ந்தது., நிற்க.,
அதென்ன கேரள தேசத்திலும் மலையாள திரைப்படங்களிலும் தமிழர்களையும் தமிழினத்தின் தேசியத் தலைவரையும் தொடர்ந்து கொச்சை படுத்தி வருகிறீர்கள்.? யார் சொல்லி கொடுத்தது உங்களுக்கு, மலையாளிகளை விட தமிழர்கள் தாழ்ந்தவர்கள் என்று., உங்களின் தாய்மொழி மலையாளத்திற்கும்
தாய்மொழி எங்களின் தமிழ்மொழி என்பதை மறந்து விடாதீர்கள்..! “பிரபாகரன்” என்பது உங்களுக்கு ஒரு சாதாரன பெயர்., எங்களுக்கு அதுவே உயிர்., இதை சொன்னால் உங்களுக்கு நிச்சயம் புரியாது., இனியும் நீங்கள் தமிழர்களையும் தமிழின தலைவரையும் தொடர்ந்து தரம் தாழ்த்தி பேசுவதாகவும் எழுதுவதாகவும் இருந்தால்- நாங்களும் “கேரளத்து காந்தி” என்றழைக்கப்பட்ட
கே.கேளப்பன் பெயரையும் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து
பெருந்தலைவராக அங்கு அறியப்பட்ட “மொகம்மத் அப்துல் ரஹிமான் சாகிப்” பின் பெயரையும் “வக்கம் மௌலாவி” யின் பெயரையும் எங்களின் படைப்புகளில் நாய்களுக்கும் பன்றிகளுக்கும் பெயராக சூட்ட வேண்டிய சூழல் ஏற்படும்., யார் இதை செய்கிறார்களோ இல்லையோ., நான் நிச்சயம் என் படைப்பில் இதை செய்வேன் என்பதை பணிவோடு கூறிக்கொள்கிறேன்., நடிகர் பிரசன்னா., சக நடிகர் என்கிற முறையில் துல்கர்க்கு ஆதரவாக பேசுவதை விட்டு விட்டு., “தலைவர்” பிரபாகரன் யார் என்பதை எடுத்து கூறினால் நன்றாக இருக்கும்..,

நன்றி

என்றும் அன்புடன்
எஸ். ஆர். பிரபாகரன்

From around the web