எங்கும் வருவோம்- கமலின் சூளுரை

கொரோனா வைரஸ் தாக்கத்தில் உலக நாடுகள் அஞ்சி நடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அனைத்தையும் போல இந்தியாவிலும் லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டது. 40 நாட்கள் ஒழுக்கமாக வீட்டிலேயே இருந்த நபர்கள் பெரும்பாலானோர் உண்டு. இந்த நிலையில் கட்டுப்பாடின்றி இரண்டு நாட்கள் முன் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறந்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றமும் உடனடியாக டாஸ்மாக்கை மூட
 

கொரோனா வைரஸ் தாக்கத்தில் உலக நாடுகள் அஞ்சி நடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அனைத்தையும் போல இந்தியாவிலும் லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டது. 40 நாட்கள் ஒழுக்கமாக வீட்டிலேயே இருந்த நபர்கள் பெரும்பாலானோர் உண்டு.

எங்கும் வருவோம்- கமலின் சூளுரை

இந்த நிலையில் கட்டுப்பாடின்றி இரண்டு நாட்கள் முன் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறந்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றமும் உடனடியாக டாஸ்மாக்கை மூட உத்தரவிட்டது.

இது தங்களுடைய அரசியல் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வெற்றியாக கமல் ரசிகர்களும் கட்சியினரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கமல் நேற்று புதியதாக ஒரு டுவிட் இட்டுள்ளார்.

குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும் என கூறியுள்ளார் இவர்.

From around the web