எடிட்டர் லெனின் இயக்கிய சினிமா கலை படைப்புகள்

தற்போது உள்ள கம்ப்யூட்டர் காலத்தில் எடிட்டிங் சாப்ட்வேரில் எடுத்துள்ள வீடியோ தொகுப்புகளை வெட்டுவது, ஒட்டுவது எடிட்டிங் பழகியவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் 80களில் வந்த பெரும்பாலான ஹிட் படங்களுக்கு கம்ப்யூட்டர் இல்லாத காலத்திலேயே பிலிம் எடிட்டிங்கை திறம்பட செய்து பல படங்களை தொய்வில்லாமல் கொண்டு சென்றவர் லெனின். இவரது தந்தை பாசமலர், பாலும் பழமும் உள்ளிட்ட கலைப்படைப்புகளை இயக்கிய மறைந்த இயக்குனர் ஏ. பீம்சிங் ஆவார். இயக்குனர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படம் தொடங்கி 80களில் வந்த
 

தற்போது உள்ள கம்ப்யூட்டர் காலத்தில் எடிட்டிங் சாப்ட்வேரில் எடுத்துள்ள வீடியோ தொகுப்புகளை வெட்டுவது, ஒட்டுவது எடிட்டிங் பழகியவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் 80களில் வந்த பெரும்பாலான ஹிட் படங்களுக்கு கம்ப்யூட்டர் இல்லாத காலத்திலேயே பிலிம் எடிட்டிங்கை திறம்பட செய்து பல படங்களை தொய்வில்லாமல் கொண்டு சென்றவர் லெனின்.

எடிட்டர் லெனின் இயக்கிய சினிமா கலை படைப்புகள்

இவரது தந்தை பாசமலர், பாலும் பழமும் உள்ளிட்ட கலைப்படைப்புகளை இயக்கிய மறைந்த இயக்குனர் ஏ. பீம்சிங் ஆவார்.

இயக்குனர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படம் தொடங்கி 80களில் வந்த முக்கியமான மசாலா படங்கள் வரை இவரின் எடிட்டிங் கைவண்ணத்திலேயே வந்திருக்கும்.இவரும் மற்றொரு எடிட்டரான விடி விஜயனும் இணைந்தே பல படங்களில் பணியாற்றியுள்ளனர்.

அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, நாயகன்,தென்றலே என்னை தொடு, பகல் நிலவு, இதயக்கோயில், நாயகன், ராஜாதி ராஜா என பல முக்கியமான 80ஸ் ஹிட் படங்களுக்கு இவரே எடிட்டிங்

இவர் எடிட்டராக மட்டும் அல்லாமல் திரைப்படங்களையும் இயக்கினார். நதியை தேடி வந்த காதல், பண்ணை புரத்து பாண்டவர்கள், எத்தனை கோணம் எத்தனை பார்வை, சொல்ல துடிக்குது மனசு, நாக் அவுட், ஊருக்கு நூறு பேர் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதில் பெரும்பாலும் தோல்விப்படங்கள் என்றாலும் சொல்லத்துடிக்குது மனசு மட்டும் லேசாக மனதில் நின்றது. இருப்பினும் இதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை. சொல்லத்துடிக்குது மனசு படத்தின் கதையமைப்பு வித்தியாசமாக இருந்ததாலும் இளையராஜா இசையமைத்த பாடல்கள் நன்றாக இருந்ததாலும் லேசான பாராட்டுதலை இப்படம் பெற்றது. இருந்தாலும் இன்று வரை 80ஸ் ரசிகர்கள் இப்படத்தையும் பாடல்களையும் கொண்டாடுகின்றனர்.

94ம் ஆண்டு காதலன் திரைப்படத்துக்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார்.

From around the web