கொரோனா வந்து இறந்த நபர் வீட்டுக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்த தெலுங்கானா சுகாதரத்துறை

கரோனா பாதித்த நபர் இருவர் ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அந்த நபர் திடீரென காணாமல் போனார். அந்த நபரின் பெயர் மதுசூதனன். இவர் ஹைதராபாத்தில் அரிசி ஆலையில் பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் 27ல் மதுசூதன் அவரது மனைவி மாதவி மதுசூதன் ஹைதராபாத் கிங் கோட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதுசூதன் தந்தை ஈஸ்வரய்யா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மே 16-ம் தேதிமாதவி குணமாகி வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரது மாமனார் ஈஸ்வரய்யா
 

கரோனா பாதித்த நபர் இருவர் ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அந்த நபர் திடீரென காணாமல் போனார். அந்த நபரின் பெயர் மதுசூதனன். இவர் ஹைதராபாத்தில் அரிசி ஆலையில் பணியாற்றி வந்தார்.

கொரோனா வந்து இறந்த நபர் வீட்டுக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்த தெலுங்கானா சுகாதரத்துறை

கடந்த ஏப்ரல் 27ல் மதுசூதன் அவரது மனைவி மாதவி மதுசூதன் ஹைதராபாத் கிங் கோட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதுசூதன் தந்தை ஈஸ்வரய்யா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மே 16-ம் தேதிமாதவி குணமாகி வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரது மாமனார் ஈஸ்வரய்யா கரோனா தொற்றால் உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால், அவரது கணவர் மதுசூதன் மட்டும் வீடு திரும்பவில்லை எனக் கூறினர்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது மதுசூதன் இறந்து விட்டார் அவரது உடலை எரியூட்டிவிட்டோம் என கூறியுள்ளனர்.

இதை ஏற்காத மாதவி அமைச்சர் ராமாராவிடம் புகார் செய்தார்.

இதுகுறித்து மாநில சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் ஈடல ராஜேந்தர் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறும்போது, “மாதவியின் மாமனார் ஈஸ்வரய்யாகடந்த மே 1-ம் தேதி உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தாருக்கு போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், அன்றைய தினமே மதுசூதனும் இறந்து விட்டார். ஆனால், ஒரே நாளில் இருவர் இறந்த செய்தியை அந்த குடும்பம் தாங்காது என்பதால், மதுசூதனின் உடலை ஹைதராபாத் மாநகராட்சியினர் கொண்டு சென்று இறுதிச் சடங்குகள் செய்து எரித்து விட்டனர்” என்றார்.

இதுகுறித்து மாதவி கூறும்போது, “என்னுடைய கணவர் இறந்தார் என்பதற்கு எந்தவித சாட்சியையும் மருத்துவமனை சார்பில் இதுவரை காட்ட வில்லை. அவரது சட்டை, பேண்ட் அல்லது இறந்த இறுதிச்சடங்கு  செய்ததற்கான வீடியோ பதிவு, புகைப்படம் போன்ற எதுவும் இல்லை. நான் எப்படி நம்புவது? கணவரின் உடலை கடைசியாக பார்ப்பதற்கு கூட இவர்கள் காண்பிக்கவில்லை என்றால் ஏதோ சதி நடந்துள்ளது. சட்டப்படி போராடுவேன். அவர் உடல்நலம் குன்றி இறந்து விட்டார் என்றால், அவரது உடலையாவது இவர்கள் காட்ட வேண்டும்” என்றார்.

From around the web