அண்ணன்களை இழந்த ஐஸ்வர்யா ராஜேஸின் உருக்கமான பேச்சு- வைரல் வீடியோ

தமிழில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஸ். காக்கா முட்டை போன்ற படங்களில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார். தற்போது கூட விஜய் சேதுபதியுடன் ரணசிங்கம் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார். எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து சினிமாவில் முன்னணி கதாநாயகியான ஐஸ்வர்யா ராஜேஸ் தான் கடந்து வந்த சோகமான பாதையை சில மாதங்கள் முன் திருச்சியில் நடந்த அமெரிக்க நிறுவனம் ஒன்றின் கலந்துரையாடலில் பேசி இருக்கிறார். தாங்கள் தெலுங்கு
 

தமிழில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஸ். காக்கா முட்டை போன்ற படங்களில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார்.

அண்ணன்களை இழந்த ஐஸ்வர்யா ராஜேஸின் உருக்கமான பேச்சு- வைரல் வீடியோ

தற்போது கூட விஜய் சேதுபதியுடன் ரணசிங்கம் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார். எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து சினிமாவில் முன்னணி கதாநாயகியான ஐஸ்வர்யா ராஜேஸ் தான் கடந்து வந்த சோகமான பாதையை சில மாதங்கள் முன் திருச்சியில் நடந்த அமெரிக்க நிறுவனம் ஒன்றின் கலந்துரையாடலில் பேசி இருக்கிறார்.

தாங்கள் தெலுங்கு பேசும் ஆந்திராவை சேர்ந்த குடும்பம் என்றும் சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டதாகவும் தாய்தான் வீடுவீடாக சென்று பஸ்களில் ஏறி புடவை விற்று தங்களை காப்பாற்றியதாக கூறுகிறார்.

உடன்பிறந்த இரண்டு அண்ணன்களில் மூத்தவர் தனக்கு 12 வயதாக இருக்கும்போது இறந்துவிட இரண்டாவது அண்ணன் தான் குடும்பத்தை தாங்குவார் என நினைத்தபோது எஸ்.ஆர்.எம்மில் படித்து நல்ல வேலையில் இருந்த அவரும் விபத்தில் இறந்துவிட்டாராம்.

இரண்டு அண்ணன்களை இழந்த நிலையில் மிகுந்த கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருப்பதாகவும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களையும் தான் எதிர்கொண்டாதாகவும்

ஆனால் அதை எப்படி கையாள்வது என்பது எனக்குத் தெரியும். எனக்கு யாராவது தொல்லை கொடுக்க முயன்றால் அவர்களுக்கு எப்படி பதிலடி தருவது என்பது எனக்குத் தெரியும். எனக்கு அந்த அளவுக்குத் துணிச்சல், தைரியம் இருந்தது. எல்லாப் பெண்களும் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

எல்லாப் பெண்களும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது மிக முக்கியம். உங்களைக் காப்பாற்ற எந்த சூப்பர் ஹீரோவும், சூப்பர்மேனும் வரப்போவதில்லை. நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். என் வாழ்க்கை முழுவதும் நானேதான் தத்தளித்தேன். என்னால் முடியுமென்றால் இங்கிருக்கும் யாராலும் முடியும் என்றே நான் நினைக்கிறேன். சரியா?

இதுதான் என் வாழ்க்கைக் கதை, என ஐஸ்வர்யா ராஜேஸ் கூறியுள்ளார்.

From around the web