கோதுமை மாவுக்குள் வெடிகுண்டு: கர்ப்பிணி பசுவின் சிதைந்த வாய்

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசிப்பழத்தில் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்ட விவகாரம் இன்னும் தீப்பொறி போல் பரவி வருகிறது. இந்த நிலையில் கர்ப்பிணி யானையைப் போல் கர்ப்பிணி பசு ஒன்றுக்கு கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்த சம்பவம் ஒன்று தற்போது தெரிய வந்துள்ளது இமாச்சலப் பிரதேசத்திலுள்ள பிலாஸ்பூர் என்ற பகுதியில் கர்ப்பிணி பசு ஒன்று கோதுமை மாவு உருண்டையை சாப்பிட வந்ததாகவும் அப்போது அதிலிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்து அந்த பசுவின் வாய் சேதம் அடைந்ததாகவும் தெரிகிறது.
 
கோதுமை மாவுக்குள் வெடிகுண்டு: கர்ப்பிணி பசுவின் சிதைந்த வாய்

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசிப்பழத்தில் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்ட விவகாரம் இன்னும் தீப்பொறி போல் பரவி வருகிறது. இந்த நிலையில் கர்ப்பிணி யானையைப் போல் கர்ப்பிணி பசு ஒன்றுக்கு கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்த சம்பவம் ஒன்று தற்போது தெரிய வந்துள்ளது

இமாச்சலப் பிரதேசத்திலுள்ள பிலாஸ்பூர் என்ற பகுதியில் கர்ப்பிணி பசு ஒன்று கோதுமை மாவு உருண்டையை சாப்பிட வந்ததாகவும் அப்போது அதிலிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்து அந்த பசுவின் வாய் சேதம் அடைந்ததாகவும் தெரிகிறது. இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பசுக்கள் விளை நிலங்களை நாசம் செய்வதால் நிலத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இவ்வாறு கோதுமை மாவு உருண்டையில் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என்று கண்டு பிடித்து உள்ளனர்

இந்த நிலையில் கோதுமை மாவு உருண்டையில் வெடிகுண்டு வைத்து பசுவின் வாய் சிதைந்ததற்கு யார் காரணம் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுவார்கள் என்று போலீசார் தரப்பில் இருந்து கூறியுள்ளனர்

கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்த கர்ப்பிணி பசு விவகாரம் என்ன ஆகுமோ என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

From around the web