பெண்குயின் செம திரில்ங்கான ட்ரைலர்… ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!!

ஹீரோயினை மையமாகக் கொண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பெண்குயின், இந்தத் திரைப்படத்தினை இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார், இது இவருக்கு முதல் படமாகும். வித்தியாசமான கதைக்களத்தால் தனக்கென ரசிகர்களைக் கொண்டுள்ள பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தினை தயாரித்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாவதாய் இருந்தது, ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படம் ரிலீஸ் ஆவது தள்ளிப்போனது. மீண்டும் எப்போது திரையரங்குகள் இயங்கும் என்பது தெரியாதநிலையில், பென்குயின் படத்தை அமேசான் ப்ரைமிற்கு விற்பனை
 
பெண்குயின் செம திரில்ங்கான ட்ரைலர்… ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!!

ஹீரோயினை மையமாகக் கொண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பெண்குயின், இந்தத் திரைப்படத்தினை இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார், இது இவருக்கு முதல் படமாகும்.

வித்தியாசமான கதைக்களத்தால் தனக்கென ரசிகர்களைக் கொண்டுள்ள பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தினை தயாரித்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாவதாய் இருந்தது, ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படம் ரிலீஸ் ஆவது தள்ளிப்போனது.

பெண்குயின் செம திரில்ங்கான ட்ரைலர்… ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!!

மீண்டும் எப்போது திரையரங்குகள் இயங்கும் என்பது தெரியாதநிலையில், பென்குயின் படத்தை அமேசான் ப்ரைமிற்கு விற்பனை செய்துவிட்டனர். பென்குயின் படம் ஜூன் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.

ட்ரைலர் பார்த்த பலரும் கீர்த்தி சுரேஷுக்கும், படக் குழுவினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதாவது ஏற்கனவே தேசிய விருதினை வென்றுள்ள கீர்த்திக்கு இந்தப் படத்தின்மூலமும் விருது கிடைக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

குழந்தை காட்டிற்குள் தொலைந்து போதல்,  போலீஸ் தேடுவது, சைக்கோ கில்லர் என பலவகையான த்ரிலிங்கான விஷயங்கள் ட்ரைலரில் காட்டியுள்ளனர். இதனால் படத்தின்மீது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

From around the web