தனுஷின் ஜகமே தந்திரம் ரிலீஸ் தேதி நாளை அறிவிப்பா? பரபரப்பு தகவல்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’, மாரி செல்வராஜ் இயக்கிய ’கர்ணன்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு நாளை வெளிவரலாம் என்ற தகவலால் தனுஷ் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ‘ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய்நாட் ஸ்டுடியோ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை காலை 9 மணிக்கு ஜகமே தந்திரம் குறித்த ஆச்சரியமான
 

தனுஷின் ஜகமே தந்திரம் ரிலீஸ் தேதி நாளை அறிவிப்பா? பரபரப்பு தகவல்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’, மாரி செல்வராஜ் இயக்கிய ’கர்ணன்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு நாளை வெளிவரலாம் என்ற தகவலால் தனுஷ் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

‘ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய்நாட் ஸ்டுடியோ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை காலை 9 மணிக்கு ஜகமே தந்திரம் குறித்த ஆச்சரியமான அறிவிப்பு வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளது, இந்த அறிவிப்பு அனேகமாக ’ஜகமே தந்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது

ஏற்கனவே ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் நாளை காலை 9 மணிக்கு இந்த தகவல் உறுதி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை 28-ஆம் தேதி தனுஷின் பிறந்த நாள் வரவிருப்பதால் அவருடைய பிறந்த நாளன்று ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில்,ம் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ளனர்.

From around the web