மாநாடு படத்தின் நாயகி திடீர் மாற்றமா? நாயகியாகிறார் நயன்தாரா?

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் ‘மாநாடு’ திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நாயகியாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திடீரென இந்த படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில்
 

மாநாடு படத்தின் நாயகி திடீர் மாற்றமா? நாயகியாகிறார் நயன்தாரா?

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் ‘மாநாடு’ திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நாயகியாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென இந்த படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

ஆனால் படக்குழுவினர் இந்த தகவலை மறுத்துள்ளனர். நாயகியாக பிரியதர்ஷன் நடித்த காட்சிகள் பெரும்பாலும் படமாக்கப்பட்டுவிட்டதாகவும் இந்த நேரத்தில் நாயகியை மாற்றும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும்அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

இருப்பினும் சிம்பு நயன்தாரா மீண்டும் ஒரு படத்தில் இணைவது உறுதி என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் இருதரப்பு ரசிகர்களும் அந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

சிம்பு, கல்யாணி, சுதீப், எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, டேனியல் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்த படம் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web