சன் டிவியின் பிரபல தொடரில் இணையும் யாஷிகா: வைரலாகும் புரமோ

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்கள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் ’ரோஜா’ தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிவசூரியன் மற்றும் பிரியங்கா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்து வரும் இந்த தொடருக்கு பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களின் வரவேற்பும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக ரோஜா சீரியல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் வரும் 27ஆம் தேதி முதல் புதிய எபிசோடு தொடங்க உள்ளதாக
 

சன் டிவியின் பிரபல தொடரில் இணையும் யாஷிகா: வைரலாகும் புரமோ

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்கள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் ’ரோஜா’ தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிவசூரியன் மற்றும் பிரியங்கா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்து வரும் இந்த தொடருக்கு பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களின் வரவேற்பும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக ரோஜா சீரியல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் வரும் 27ஆம் தேதி முதல் புதிய எபிசோடு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சீரியலில் தற்போது முக்கிய கேரக்டரில் நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘ரோஜா சீரியல் மூலம் மீண்டும் உங்கள் வீட்டிற்கு நாங்கள் நேரடியாக வருகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘ரோஜா’ சீரியலின் புதிய புரோமோவையும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பெரிய திரையில் கவர்ச்சியில் கலக்கிய யாஷிகா, சின்னத்திரை எப்படி தோன்றுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web