விளக்கெண்ணெயினால் இத்தனை பயன்களா?!


யாரையாவது திட்டனும்ன்னா விளக்கெண்ணெய்ன்னு திட்டிடுவோம். விளக்கெண்ணெய் மற்ற எண்ணெயைவிட பிசுபிசுப்பானது. ருசியற்றது. இது ஆமணக்கு விதையிலிருந்து வருவது.. இந்த விளக்கெண்ணெய்ன்னு கிண்டல் பேசும் நாம அதன் பயன்பாட்டை பத்தி அறியாதவங்களாகிடுறோம். விளக்கெண்ணெய் பயன்பாட்டின் சிலவற்றை இப்ப பார்க்கலாம்..

விளக்கெண்ணெயுடன் சிறிது நீர் சேர்த்து குழைத்தால் வெண்மையாக க்ரீம் மாதிரி நுரைத்துக்கொண்டு வரும். அதனை உதட்டில் தினமும் தடவி வந்தால் உதடு சிவப்பாகும். விளக்கெண்ணெயை சிறிது பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வர சருமத்தில் உள்ள அழுக்கு வெளியேறும். தினமும் இரவில் ஐ ப்ரோ பென்சிலால் விளக்கெண்ணெயை தொட்டு புருவம் வரைந்து வந்தால், அதேப்போல் புருவம் அடர்த்தியாக வளரும். தினமும் சம அளவு விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால் இளமையான சருமம் கிடைக்கும். உருளை கிழங்கை வட்ட வடிவில் துண்டாக்கி அதில் விளக்கெண்ணெய் தடவி கண்கள் மீது வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களில் உள்ள கருவளையம் மறையும். விளக்கெண்ணெயுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 3 நாட்கள் செய்து வர முகத்தில் கரும்புள்ளிகள் மறைந்து பொலிவுடன் காணப்படும்.

விளக்கெண்ணெயின் பயன்கள் தொடரும்…..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.