சித்ரா வழக்கில் முக்கிய திருப்பம்.... ஜாமினில் வெளிவந்த "ஹேமந்த், 

சித்ராவிக் தற்கொலைக்கு காரணமாக இருந்த "ஹேமந்த்,  தற்போது ஜாமினில் விடுதலையாகி இருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

 
 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினாலும், அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது பாண்டியன் ஸ்டோர் தொடர் தான். 

அந்த தொடரில் வரும் குமரன், முல்லை ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி இருக்கும்போது சித்ரா சமீபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் தரப்பில், "ஹேமந்த், சித்ரா மீது சந்தேகம் கொண்டு அவரை கடுமையாக பேசியதால்தான் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி அந்த முடிவை எடுத்தார்" என்றும் கூறப்பட்டு, அவரை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. 

ஆனால் ஹேம்நாத்தின் தந்தை, "யாரை காப்பாற்ற என் மகனை கைது செய்துள்ளனர்" என்று சமீபத்தில் கூறியிருந்தார். இது தற்கொலைதான் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டாலும் நாளுக்கு நாள் சித்ரா வழக்கில்  திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சித்ரா வழக்கில் முக்கிய திருப்பமாக ஹேமந்த ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

From around the web